"கை" நடுங்கிட.. "கரும்பு" பிழிந்திட.. வர்றார்.. ஈவிகேஎஸ் இதுக்கு ஓகேவா: ஆறுமுகம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுப்பாரா என ஆறுமுகம் கேட்டுள்ளார்
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுக்க தயாரானால் என்னுடைய மனுவை நான் வாபஸ் பெறுவேன்" என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சைகள் அதிக ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்... சில சுயேச்சைகள் வினோதமான முறையில் வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் களமிறங்கி உள்ளது.. தேர்தல் சமயங்களில் பெரிய பெரிய கட்சிகளுடன் மோதி களம் காண்பவர் இச்சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன்.

குவார்ட்டர்
அதன் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் இவர் எப்போதுமே கவலைப்பட்டவர் கிடையாது. "கொள்கையில்லா கூட்டணியை எந்தக் கட்சிகள் வேண்டுமானாலும் உருவாக்கலாம்... ஆனால், குவார்ட்டர் இல்லாத கூட்டத்தை எந்தக் கொம்பனாலும் கூட்ட முடியாது" என்று ஒவ்வொருமுறையும் முழங்கி வருபவர்.. இப்போதும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் களமிறங்குவதாக அறிவித்துள்ளது... அச்சங்கம் சார்பில் எம்.எஸ்.ஆறுமுகம் வேட்பாளராக போட்டியிடுகிறார்.. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

மஞ்சள் தாலி
வழக்கமாக, கையில் டெபாசிட் தொகை இல்லை என்றால், டாஸ்மாக் கடைகளின் வெளியே கிடக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி விற்பனை செய்து, அதன்மூலம் டெபாசிட் தொகுதியை செலுத்தி போட்டியிடுவார்கள்.. அதேபோல மதுவால் பல குடும்பங்கள் நாசமாவதை சுட்டிக்காட்டும் விதமாக, வழக்கமாக எல்லா தேர்தல்களிலும் வேட்பாளர்கள் வெள்ளை புடவை அணிந்து விதவை கோலத்தில், கையில் மஞ்சள் தாலி கயிறுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம்.. அந்த வகையில், இந்த முறையும், இடைத்தேர்தல் நடக்க போகும் தொகுதியில், டாஸ்மாக் வாசலில் கிடந்த காலி பாட்டில்களை எல்லாம் ஆறுமுகம் பொறுக்கியெடுத்து, அதை காசாக்கி, டெபாசிட் தொகை கட்டினார்..

விதவை கோலம்
அதேபோல ஆறுமுகமும் விதவை கோலத்தில், கையில் தாலியுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.. வெள்ளை புடவையில், தலைவிரி கோலத்தில் ஆறுமுகம் வந்ததை ஆச்சரியமாக பார்த்தனர்.. அவர் விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நுழைவாயிலில் அவரை தடுத்து நிறுத்தி இதே கோலத்தில் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று சொன்னார்கள்.. இதனை எடுத்து அவர் சாதாரண உடை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்... பின்னர் இதுகுறித்து ஆறுமுகம் சொல்லும்போது, "நான் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளேன்.

பாட்டில் பொறுக்கி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக பாட்டில் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். எதற்காக இப்படி விதவை கோலத்தில் வந்தேன் என்றால் கரூரில் குடியரசு தின விழா அன்று டாஸ்மாக் கடையில் அதிக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்களைவிட மது குடித்து இறந்தவர்களின் விதவை மனைவிகள் எண்ணிக்கை அதிகம். மது குடிப்பவர்கள் எப்பவும் தெளிவாக இருப்பார்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள். தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவானால் மது குடித்து இறந்த விதவை மனைவிமார்களுக்காக நான் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளேன்.

கை நடுங்கிட
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுக்க தயாரானால் என்னுடைய மனுவை நான் வாபஸ் பெறுவேன்" என்றார்.. இந்நிலையில், இச்சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கையில், "இலைக்கு" வேலையில்லை, "கை" நடுங்கிட, "கரும்பு" சார் பிழிந்திட வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிறார் நமது "பாட்டில் பொறுக்கி நாயகன்" ஆறுமுகம் என்று தெரிவித்திருந்தார்.. இந்த அறிக்கையானது, ஈரோட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications