சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"போலாம் ரைட்".. வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு.. மகிழ்ச்சியில் மக்கள்.. தீர்ந்தது அந்த சந்தேகம்

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயர்வு குறித்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயருமா? உயராதா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில் திமுக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்து துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை திக்குமுக்காட செய்து வருகிறது..

எனினும் கடந்த மாதம், திடீரென ஒரு புரளி கிளம்பியது.. அரசு பஸ்களை, தனியாருக்கு திமுக விற்க போவதாக இணையத்தில் தகவல்கள் பரவின.

டெல்லி: டிராலியில் 2215 தோட்டாக்கள்! சுதந்திர தினத்தை சீர்குலைக்க திட்டமா? 6 பேரிடம் தீவிர விசாரணை டெல்லி: டிராலியில் 2215 தோட்டாக்கள்! சுதந்திர தினத்தை சீர்குலைக்க திட்டமா? 6 பேரிடம் தீவிர விசாரணை

கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

இதனால், புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார்.. "இன்று ஸ்டாலின் அரசு ஏழை, எளிய தமிழக மக்களின் பயணங்களுக்கு பெரும்பங்காற்றும் அரசு பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது தமிழகத்தையே விற்பதற்கு சமமாகாதா? எனவே, அரசு பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முடிவை மாநில அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

கருணாநிதி

கருணாநிதி

இதையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உடனே இதற்கு பதிலளித்தார்.. "இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் என்பதை நிர்மாணித்தவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்... கருணாநிதி வழியில் செயல்படுகின்ற ஸ்டாலின் ஆட்சியில் அரசு பஸ்களை தனியார் மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று கூறி நிலவிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 லீக் + புரளி

லீக் + புரளி

இப்போது இன்னொரு புரளியை யாரோ கிளப்பி உள்ளனர்.. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பஸ் கட்டண விலையும் உயர போகிறது என்ற தகவல்கள் வட்டமடித்து வருகின்றன.. இந்த கேள்வி தமிழக மக்களின் மனதிலும் சந்தேகமாக எழுந்துள்ளது... ஏற்கனவே ஜிஎஸ்டி வரியால், பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், பஸ் கட்டணமும் உயர்ந்தால் என்னாவது? என்ற கலக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்.. இந்நிலையில், இதற்கும் ஒரு விளக்கத்தை தந்து, மக்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது திமுக அரசு.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "ஒன்றிய அரசு அடிக்கடி டீசல் விலையை உயர்த்துவதால், பஸ்களை நஷ்டத்தில் இயக்க வேண்டிய நிலை உள்ளது... ஆனாலும், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.. அதற்கு பதிலாக இழப்பை ஈடுகட்டும் விதமாக இன்னொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருமூச்சு

பெருமூச்சு

அதன்படி, பேருந்துகளில் காய்கறிகள் ஏற்றி செல்லவும், பேருந்துகளின் இருபுறங்களிலும் விளம்பர பலகை வைத்து, வருவாய் ஈட்டவும் மற்றும் பிற வகைகளில் ஏற்படுகின்ற செலவினங்களை குறைத்து போக்குவரத்து கழகங்களை லாபகரமாக இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது... இந்த வருடம், புதிதாக 2 ஆயிரத்து 35 பஸ்கள் கொள்முதல் செய்யப்படும்" என்றார் அமைச்சர்... இந்த விளக்கத்தினால், தமிழக மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.. இந்த முறை ஆட்சி பொறுப்பேற்றது முதல், மகளிர் இலவச பேருந்து உட்பட பல்வேறு விஷயங்களில் முதல்வர் ஸ்டாலின் கவனத்தை செலுத்தி வரும் நிலையில், பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது என்று அமைச்சரிடம் தெரிவித்துள்ளதும், மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

English summary
Great announcement by dmk government and minister sivashankar says about tn transport fair தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயர்வு குறித்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி தந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X