லிஸ்ட் ரெடி.. பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி.. வடசென்னையில் ரெடியாகிறது கிச்சன்.. தமிழக அரசு அதிரடி
வடசென்னையில் சமையல் கூடங்களை அதிகாரிகள் தேர்வு செய்து வருகிறார்கள்
சென்னை: பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.. காலை உணவை தயாரித்து வழங்குவதற்கான இடங்களையும் அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ம் தேதி முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
முதல் கட்டமாக இந்த திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் கூடுதலாக அறிவித்திருந்தார்.
அதன்படியே, தமிழக அரசு சார்பில் முதல்வரின் காலை உணவுத்திட்டம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.. அதில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளி மாணவர்கள்
இதனிடையே, இந்த அறிவிப்பை செயல்படுத்தும்விதமாக மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அதன்படியே இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

லிஸ்ட் ரெடி
சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5,941 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க லிஸ்ட் தயாராகி உள்ளது.. சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சிற்றுண்டிக்கு ஆண்டுக்கு ரூ.1.66 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது... முதலில், சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால் மாநில அரசு நிதி வழங்குவதால், மாநகராட்சி இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது..

பள்ளிக்கல்வி துறை
அதனால் அரசு சார்பிலேயே இதை செயல்படுத்த முனைப்பு காட்டப்படுகிறது.. பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும், என்ஜினியர்களும், இதற்கான சமையல் கூடம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்... இந்த காலை உணவை 6 இடங்களில் தயாரிப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.. காலை சிற்றுண்டி திட்டம் மாநகராட்சி மண்டலம் 1 முதல் 5 வரையில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமே முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது.

சமையல் கூடங்கள்
அதனால் வட சென்னை பகுதியில் உள்ள இந்த மண்டலங்களில் சமையல் கூடம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டவுடன், இந்த 6 சமையல் கூடங்களில் காலை சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு, அவைகள் 36 பள்ளிகளுக்கும் வினியோகிக்கப்படும்... செப்டம்பர் 15-ந்தேதி இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடும் என்று கூறப்படுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications