"கை" வைக்கிறாங்க.. பாஜகவும் கலைஞரும் வேற.. ஸ்டாலினுக்கு நிறைய சேலஞ்ச்.. பிரமிச்சு போயிட்டேனே: ஆ.ராசா
இந்துத்துவா பாஜகவை, முதல்வர் ஸ்டாலின் எவ்வாறு எதிர்க்கிறார் என்று ஆ.ராசா விவரித்துள்ளார்
சென்னை: "அன்றைக்கு ஜனசங்கத்தை அண்ணா எப்படி எதிர்கொண்டாரோ, இந்துத்துவாவை கலைஞர் எப்படி எதிர்கொண்டாரோ, பாஜகவை கலைஞர் எப்படி எதிர்கொண்டாரோ, அதைவிட இன்றைக்கு சவால்கள், முத்துவேல் கருணாநிதிக்கு அதிகமாக இருக்கிறது.. அவைகளை முதல்வர் ஸ்டாலின் எதிர்கொள்வதை பார்த்து நாங்களே பிரமித்துதான் போகிறோம்" என்று திமுகவின் மூத்த தலைவர் ஆ.ராசா பூரித்து சொல்கிறார் நம்மிடம்.
திமுகவின் எம்பியும், மூத்த தலைவருமான ஆ.ராசா, மிகப்பெரிய ஆளுமையாக, தவிர்க்க முடியாத தலைவராக அரசியல் களத்தில் உருவாகி உள்ளார்..
சமீபகாலமாகவே இந்துத்துவா, மனுதர்மம், சனாதனத்துக்கு எதிரான கருத்துக்களை ஆழ விதைத்து வருகிறார் ஆ.ராசா.. அந்தவகையில், நம் ஒன் இந்தியா தமிழ் சேனலுக்கு சிறப்பு ஒன்றை தந்துள்ளார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

ஹாட் லேண்ட்
குறிப்பாக, "முதல்வராக பதவியேற்றபோது, கோவைக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருந்தார்.. அதற்கு பிறகு அதிமுகவின் கோட்டையாயான கோவை, மெல்ல மெல்ல திமுக பக்கம் சாய துவங்கியது.. இந்தசூழலில், சமீபகாலமாகவே, நடந்து வரும் நிகழ்வுகளை வைத்து, கோவையை திமுகவை எதிர்க்கக்கூடிய இடமாக (ஹாட் லேண்ட் ) என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.. இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?" என்று நம் சார்பாக கேள்வியை முன்வைத்தோம். அதற்கு ஆ.ராசா தந்த பதில்தான் இது:

சாய்ந்த கொங்கு
"கோவையில் பாஜகவினர் ஒருமுறை வெற்றி பெற்றார்கள்.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு அங்குள்ள பகுதியில் வெற்றிவாய்ப்பு கொஞ்சம் இருந்தது.. அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்றால், கொங்கு மண்டலம், மத ரீதியாக தங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று புரிந்து கொண்டுவிட்டார்கள்.. நம்ம பக்கம்தான் கொங்கு இருக்கு என்று நினைத்து கொண்டுள்ளார்கள்.. அதனால்தான், என்னைக்கோ நடந்த குண்டுவெடிப்பு, இப்போது நடக்கும் அசம்பாவிதங்களை வைத்து பேசி வருகிறார்கள்..

முத்துவேல் கருணாநிதி
எப்போதுமே சாதியை, மதத்தை வைத்து அசம்பாவிதங்கள் நடப்பது என்பது, அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்து வரும் நிகழ்வுதான்.. அது இங்கு புதிது கிடையாது.. ஆனால், அதை அரசாங்கம் எப்படி கையாள்கிறது என்பதுதான் முக்கியம்.
இப்போதும் வெடிவிபத்து நடந்தது.. குற்றவாளியை உடனே கண்டுபிடித்து விடவில்லையா? அரசு தரப்பில் நம் செய்யக்கூடிய வேலையை, அண்ணாமலையை தவிர வேறு யாராலும் குறை சொல்ல முடியாது.. இப்படி குறை சொல்றதை தவிர, அண்ணாமலைக்கு அரசியலில் வேற வேலையும் கிடையாது..

கருணாநிதி
தங்கள் கையில் இருந்ததாக கருதப்பட்ட கோவை, இன்று தங்கள் கையை விட்டு நழுவி போகிறதே என்கின்ற பரிதவிப்புதான் இதெல்லாம்.. அதனால், மறுபடியும் கோவையை தக்க வைத்துக் கொள்வதற்காக, இப்படியெல்லாம் கிளப்பி விடுகிறார்கள்.. நான் எப்போதுமே கலைஞர் பக்கத்தில் இருந்தவன்.. கலைஞர் கூடவே இருந்தவன்.. ஒரு சம்பவம் நடந்தால், அதற்கு கலைஞர் எப்படி முடிவெடுப்பார் என்று எனக்கு நன்றாக தெரியும்.. கலைஞர் அன்று எந்த அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்தாரோ, அதைவிட ஒரு அங்குலமாவது கூடுதலாக நிர்வாகத்தில் இருந்துவிட வேண்டும் என்ற துடிப்பு இப்போதைய முதல்வரிடம் இருப்பதை நான் பார்க்கிறேன்..

கலைஞர்
நாங்கள் கலைஞரை பிரமிப்போடு பார்த்தோம்.. பார்க்கிறோம்.. எப்போதும் பார்ப்போம்.. ஆனால், அந்த பிரமிப்பு, ஸ்டாலினிடம் இருக்குமா என்ற ஐயப்பாடு பலரிடம் இருந்திருக்கலாம்.. அந்த பிரமிப்பு ஒவ்வொரு நாளும் இவரது செயல்திறமையில் பார்க்கும் அளவுக்கு உள்ளது.. அதனால் அண்ணாமலை ஆட்டமெல்லாம் இங்கே செல்லாது.. புற்றுநோய் சிகிச்சைக்காக அண்ணா, அமெரிக்கா சென்றபோது, அவரிடம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள்.. "உங்க ஊர்ல "ஜனசங்கம்" என்று மதரீதியான ஒரு கட்சி இருக்கிறதே.. அந்த ஜனசங்கம் உங்கள் நாட்டில் ஆட்சிக்கு வருமா? என்று கேட்டார்கள்..

தீர்க்கதரிசி
அதற்கு அண்ணா, "இந்தியாவில் ஆட்சிக்கு வரும் என்று சொல்ல முடியாது, ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு ஒருபோதும் வராது.. ஒருவேளை இந்தியாவில் ஆட்சிக்கு வந்தால், இந்தியா துண்டு துண்டாக ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது" என்றார்.. எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி அண்ணா.. இன்னைக்கு அண்ணா சொன்னது, கிட்டத்தட்ட நடந்துக்கொண்டிருக்கிறது.. இந்துத்துவாவை அண்ணா எதிர்க்கவேண்டிய அவசியம் 20 சதவீதம்தான் அப்போது இருந்தது.. அதற்கு பிறகு பாஜக ஆட்சிக்கு வந்தது.. நாங்களும் அவர்களுடன் கூட்டணி வைத்தோம்..

சேலஞ்ச்
ஆனால், அந்த கூட்டணியில் இன்றைக்கு செய்யும் எந்த அயோக்கியத்தனத்தையும் நாங்கள் அப்போது அவர்களை செய்ய விடவில்லை.. ராமர் கோயில் கட்டக்கூடாது, பொதுசிவில் சட்டம் கொண்டு வரக்கூடாது., காஷ்மீருக்கு 360 கொண்டுவரக்கூடாது என்றோம்.. இப்போது இவைகள் எல்லாவற்றிலும் பயங்கரமாக "கை" வைக்கிறார்கள்.. நாங்கள் இருக்கும்போது "கை" வைக்கவில்லை.. அப்படியானால், ஒருவர் கூடவே இருந்தபோதும்கூட, அவர்களின் கொள்கைகளை முடக்கிப்போட்ட வரலாறு கலைஞருக்கு உண்டு.. அன்றைக்கு ஜனசங்கத்தை அண்ணா எப்படி எதிர்கொண்டாரோ, இந்துத்துவாவை கலைஞர் எப்படி எதிர்கொண்டாரோ, பாஜகவை கலைஞர் எப்படி எதிர்கொண்டாரோ, அதைவிட இன்றைக்கு சவால்கள், முத்துவேல் கருணாநிதிக்கு அதிகமாக இருக்கிறது..

யோக்கியதை
கலைஞர் காட்டிய சாதுர்யத்தைவிட, அண்ணா காட்டிய சாதுர்யத்தைவிட, அதிகமாக சாதுர்யத்தை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் தலைவருக்கு இப்போது உள்ளது.. அதை செய்திருக்கிறாரா? இல்லையா? என்றால், நாங்களே பிரமித்துதான் போகிறோம்.. சிறப்பாக செய்து வருகிறார்.. நீட் தேர்வு, குடியுரிமை சட்டம், இப்படி நீ கொண்டு வரும் எதையுமே நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சட்டமன்றத்தில் நேருக்கு நேராக தீர்மானம் போட்டாரே.. எங்கள் அடையாளத்தை காட்ட இதைவிட வேற என்ன சந்தர்ப்பம் வேண்டும்? இதை செய்ய வேறு முதல்வருக்குயோக்கியதை உண்டா?" என்று கேள்வி எழுப்பினார் ஆ.ராசா.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார்












Click it and Unblock the Notifications