சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பெரிய அறிவிப்பு.. இந்த 2 நாட்களுக்கும் ரேஷன் கடைகள் லீவு! திடீர்னு ஏன்?
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும்நிலையில், தென்சென்னை தொகுதியிலிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகள் மூலம் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.. இதனால், கோடானு கோடி மக்கள் நேரடியாகவே பலனை பெற்று வருகிறார்கள்.

பயோமெட்ரிக்: அதேபோல, பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்கடி செயல் இழந்து விடுவதால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் சென்றவண்ணம் இருந்தன.
அதனால்தான், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணியும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பேயே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
கருவிகள்: அதுமட்டுமல்ல, ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடுதல், பாயின்ட் ஆப் சேல் கருவிகள் பராமரிப்பு போன்ற பணிகளை ஒயாசிஸ் என்ற தனியார் நிறுவனம்தான் இதுநாள் வரை மேற்கொண்டு வந்தது. ஆனால், இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், மறுபடியும் டெண்டர் விடப்பட்டதில், மறுபடியும் ஒயாசிஸ் நிறுவனத்திற்கே அனுமதி ஆணை வழங்கப்பட்டிருப்பதால், அப்பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.
அதன்படி, தமிழகம் முழுவதுமுள்ள 35,750 ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும் விற்பனை முனைய கருவிகள் மாற்றப்பட்டு வருகின்றன. தற்போது, விரல் ரேகை, பிரின்டர் சாதனம், விழித்திரையுடன் கூடிய விற்பனை முனைய கருவிகள் வைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், தென்சென்னை பகுதியிலுள்ள ரேஷன் கடைகளிலும் இந்த பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.
தென்சென்னை: இந்நிலையில், இன்றைய தினம், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.. இதையடுத்து, முக்கிய அறிவிப்பு ஒன்று தென்சென்னையிலிருந்து வெளியாகியிருக்கிறது.
தென் சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர், சோழிங்கநல்லுார், சைதாப்பேட்டை, தாம்பரம் உட்பட, 9 மண்டலங்களில் உள்ள, 898 ரேஷன் கடைகளில் இன்றும், நாளையும் புதிய கருவிகள் வைக்கும் பணி நடக்கிறது. இதனால், அந்த கடைகளில் இரு நாட்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், வரும், 6ம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும், உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications