என்ன இது? ரொம்ப பெரிய தவறு.. நேரடியாக வந்து ஆக்சன் எடுத்த ஜெ.ராதாகிருஷ்ணன்.. இதுதான் அதிரடி!
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எடுத்த சில நடவடிக்கைகள் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் பொதுவாக மக்கள் நடக்க நடைமேடை இல்லை என்ற புகார் உள்ளது. சாலைகள் அகலமாக இருப்பதால் நடைமேடை சரியாக இல்லை என்ற புகார் உள்ளது. அப்படியே நடைமேடை இருந்தாலும் கூட அந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விடுகின்றன.

சிறு சிறு டீ கடைகள் தொடங்கி நிரந்தர கடைகள், வீடுகள், குடிகள் என்று பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில்தான் இதை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் களமிறங்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அகற்றம்: இந்த நிலையில் நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைமேடைகளில் அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளை இவர் அகற்றினார். அதிகாரிகளை அழைத்து சென்று ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து அதை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். முதல் கட்டமாக நேற்று பெசன்ட் நகரில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டது பெரிய அளவில் கவனம்பெற்றுள்ளது . ராதாகிருஷ்னன் இந்த பொறுப்பிற்கு வந்ததில் இருந்தே சிங்கார சென்னை திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக புதிய டீம் ஒன்றையும் களமிறக்கி உள்ளார். அதோடு இதுவரை முடிக்கப்பட்ட பணிகள், முடிக்கப்படாத பணிகள், அறிவிக்கப்பட்ட பணிகளை லிஸ்ட் எடுத்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார்.
மேலும் சென்னையில் நடக்கும் ஒவ்வொரு பணிகள் குறித்தும் தனக்கு அப்டேட் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவித்து உள்ளார். இந்த நிலையில் ராதாகிருஷ்னன் பின்வரும் முக்கியமான உத்தரவுகளை மாநகராட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ளார். அதில், சென்னையில் எங்கெல்லாம் சாலை பணிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உட்புற சாலை பணிகளை முடிக்க வேண்டும்.
முக்கியமாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை விரைந்து முடிக்க வேண்டும். இதில் தாமதம் இருக்க கூடாது. இது போன்ற சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை செய்ய வேண்டும். சாலைகளை முறையாக மில்லிங் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை - மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் வரும் சாலைகளை அவர்களுடன் இணைந்து பராமரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிங்கார சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்பது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications