கழுகு பார்வை.. சென்னையில் சின்னதாக விதியை மீறினாலும் ஸ்பாட் ஃபைன்.. என்ன நடக்குதுன்னு பாருங்க!
சென்னை: ஒரு மாதத்தில், கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் புதிய PoS சாதனங்கள் மூலம் பல்வேறு விதிமீறல்களுக்காக ₹1 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளன. அக்டோபர் 2024 இல் தொடங்கப்பட்ட இந்த சாதனங்கள், தாமதமாக வழங்கப்படும் பேப்பர் சலான்களுக்குப் பதிலாக டிஜிட்டல் பேமெண்ட்கள் மூலம் உடனடி அபராதங்களைச் செயல்படுத்துகின்றன.
குப்பை கொட்டுதல் விதிமீறல்களுக்கு ரூ.72.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததால் 13.14 லட்சம் வசூல் செய்யப்பட்டது. அபராத வசூலில் கோடம்பாக்கம் முதலிடத்தில் உள்ளது. மேலும் பல சாதனங்கள் வரவிருக்கும் நிலையில், கால்நடைகளை சாலையில் விடுவது போன்ற 13 விதிமீறல்களுக்கான அபாரதங்களை சென்னை முழுவதும் அமல்படுத்த GCC திட்டமிட்டுள்ளது.

அபராதம்: சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் ஸ்பாட் பைன் முறையை கொண்டு வந்து உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன் போடப்படும்.
மாநகராட்சி நிர்வாகிகள் இதற்காக பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகளைப் பயன்படுத்தி அபராதத் தொகையை வசூலிப்பார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்தி சொத்து வரி கூட வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சுமார் 500 பிஓஎஸ் கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, சாலை விதிகளை மீறும் போது போக்குவரத்து காவலர்கள் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல் பல்வேறு குடிமை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எப்படி அமல்படுத்தப்படும்: பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன் போடப்படும்.
இதற்காக UPI, டெபிட்/கிரெடிட் கார்டுகள், டிமாண்ட் டிராஃப்ட்கள் அல்லது காசோலைகள் மூலம் பணம் செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து GCC சாதனங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. இதனால் பைன் நேரடியாக மாநகராட்சிக்கு செல்லும். அதிகாரிகள் பணம் சுருட்ட வாய்ப்பு இல்லை. மாநகராட்சி வருவாயும் உயரும்.
மாநகராட்சி பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் GCC இல் உள்ள வார்டு உதவி பொறியாளர்கள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். இது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும். இதற்காக 15 பறக்கும் படை வாகனங்கள் களமிறக்கப்படும். இந்த சாதனங்கள் இப்போது களமிறக்கப்பட்டு வருகிறது.
ஸ்பாட் அபராதம் விதிப்பதற்காக இன்னும் இரண்டு நாட்களில் அவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைப்போம், என்று GCC கமிஷனர் ஜே குமரகுருபரன் கூறி உள்ளார், வாடகைத் தொகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. முன்னதாக, அபராதத் தொகையை டிமாண்ட் டிராஃப்ட் அல்லது காசோலையாக வசூலிக்க காகித சலான்கள் வழங்கப்பட்டன. இனி ஸ்பாட் பைன் போடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் சலான்கள் வழங்கப்பட்ட பிறகு பரிவர்த்தனைகளை முடித்து டேட்டாவை அப்லோட் செய்ய ஓரிரு நாட்கள் ஆகும். ஆனால் POS சாதனங்கள் நிகழ்நேர பரிவர்த்தனைகளை உடனுக்குடன் அப்லோட் செய்ய முடியும்.
சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன் போடப்படும்.












Click it and Unblock the Notifications