Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஸ் பிளான்! சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்பு - ஒப்புதல் வழங்கியது ரயில்வே வாரியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்புக்கு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பணிகள் அடுத்த 3 மாதத்திற்குள் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பெருநகர் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் ரயில் சேவை மெட்ரோ ரயிலுடன் இணைக்க முடிவு செய்துள்ளது.

Green Signal for Chennai Flying Train-Metro Link Railway Board Approves

சென்னை பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் தந்ததா என ராஜ்யசபா எம்.பி ஆர்.தர்மர் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.

சென்னை பறக்கும் ரயில் - சென்னை மெட்ரோ ரயில் இணைப்பிற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கி உள்ளது. இந்த ஒப்புதல் ஆனது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் பறக்கும் ரயில் சேவையை இணைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த பணிகளை வேதப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கபட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் பறக்கும் ரயில் சேவை மெட்ரோ ரயில் இணைப்பு பகுதிகளை கொள்கை அளவிலான ஒப்புதல் ரயில்வே வாரியம் வழங்கி உள்ளது.

அடுத்த கட்டமாக தமிழ்நாடு அரசுக்கும் சென்னை மெட்ரோ ரயில்வேக்கும் புரிந்துணர்வு ஓப்பந்தம் மேற்கொள்ள பணிகளானது அனைத்து பகுதிகளுக்கும் மேற்கொள்ளப்படும். இதற்காக அணைத்து பணிகளையும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கு அடுத்த 3 மாதங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பணிகள் நிறைவு பெற்று புரிந்துணர்வு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பிறகு இந்த ஆண்டு இறுதிகுள் பறக்கும் ரயில் சேவையானது சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிகுள் சென்னை பறக்கும் ரயில் சேவையை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு அது மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டு அந்த வழித்தடங்கள் அனைத்தும் தமிழக அரசின் வசம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் இருந்து அடுத்த இரண்டு ஆண்டுக்குள் முழுவதுமாக பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்தி அதை மெட்ரோ ரயில் தடத்திற்கு இணையாக தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. முதல் கட்டமாக 1997-ஆம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 266 கோடியில் பாதை அமைக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக ரூ.877.59 கோடியில் மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு கடந்த 2007-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்தத் தடத்தில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து 3-ஆம் கட்டமாக 2008-ஆம் ஆண்டு பரங்கிமலை -வேளச்சேரி இடையே 5 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இந்தப் பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். பணிகள் முழுவதும் நிறைவடையும் பட்சத்தில் திருவான்மியூர், மயிலாப்பூரில் இருந்து பயணிகள் பரங்கிமலை வழியாக தாம்பரம், கிளாம்பாக்கம் வரை எளிதாகச் செல்ல முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+