Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கச்சா எண்ணெய் பரவியது நெருக்கடி நிலை.. தடுப்பு நடவடிக்கையில் திருப்தி இல்லை! நீதிபதிகள் காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கலந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், எண்ணெய் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.

Green Tribunal Criticizes Actions To Prevent Crude Oil Spill As Not Satisfactory

ஆனால் வட சென்னையின் எண்ணூர், எர்ணாவூர் பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. காரணம் வெள்ளம் வந்தபோது அத்துடன் கலந்து வந்த கச்சா எண்ணெய் கழிவுகள்தான். மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்த நிலையில், கச்சா எண்ணெய் கழிவுகளும் வீடுகளை சூழ்ந்தன. இதன் காரணமாக மூச்சுத்திணறல், தோல் அரிப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் வெளியில் தெரிந்திருக்கிறது.

இது தொடர்பாக கொடுங்கையூரில் ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் வெளியேற்றப்பட்டபோது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரம் பெரியதாக வெடித்ததையடுத்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு கடந்த 9ம் தேதி தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அதாவது மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய் சத்யஜித், "இது எண்ணெய் கசிவு கிடையாது. எண்ணெய் தடயங்கள்தான் (Traces Of Oil)" என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், "நீர்வளத்துறை அறிக்கை 5 கிலோமீட்டருக்கு பெரும் அளவில் எண்ணெய் கழிவுகள் காணப்பட்டதாக தெரிவிக்கிறது. 5 கிமீ பரவியுள்ள எண்ணெய் கழிவை எப்படி Trace of Oil என மாசு கட்டுப்பாடு வாரியம் கூற முடியும்" என்று கேள்வியெழுப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மறுபுறம் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வில், எண்ணூரை ஒட்டிய கடல் பகுதியில் சுமார் 20 ச.கி.மீ பரப்பளவுக்கு எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதை கண்டுபிடித்தது. இது இந்த விவகாரம் தொடர்பான தீவிரத்தன்மையை மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், எண்ணெய் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. அதாவது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 9ஆம் தேதி ஆய்வு செய்தபோது சிபிசிஎல் ஆலையிலிருந்து வடிகால் வழியாக வெளியேறிய எண்ணெய், பக்கிங்காம் கால்வாய் முதல் கழிமுகம் வரை 11கிமீ தூரத்திற்கு பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கூறினார்.

இதை குறிக்கிட்ட நீதிபதிகள், "7ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கையில் சிபிசிஎல் ஆலையின் தெற்கு வாசலில் மட்டுமே எண்ணெய் காணப்பட்டதாக கூறினீர்கள். அன்று ஆய்வு செய்யும்போது குழாய்கள், எண்ணெய் கலன்களில் கசிவு இருக்கிறதா என்று பார்க்கவில்லையா?" என்று கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், "சிபிசிஎல் ஆலை அதிகப்படியான எண்ணெய்யை தேக்கி வைத்ததும், மழைநீர் தேக்கி வைக்கும் குளம் போதுமானதாக இல்லாததும் முறையாக பராமரிக்காததுமே எண்ணெய் கசிவுக்குக் காரணம் என்பதற்கான எல்லா ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன" என்று கூறினார். ஆனால் இதற்கு சிபிசிஎல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார். மட்டுமல்லாது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை அரைகுறையானது என்றும் குற்றம்சாட்டினார்.

மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், "3ம் தேதி முதல் 5ம் தேதி வரை எண்ணெய் கசிவு நடந்துள்ளது, முதல் ஆய்வு 7ம் தேதி நடந்துள்ளது, 11ம் தேதி சிபிசிஎல்தான் காரணம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டுபிடித்திருக்கிறது. தலைமை செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது? இதுவரை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? எத்தனை மக்கள் பாதிக்கப்பட்டனர்? எத்தனை கடைகளில், வீடுகளில் எண்ணெய் படிந்தது? அரசு சார்பில் என்ன நிவாரணம் கொடுக்கப்பட்டது?" என்று கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், "கழிமுகத்திலிருந்து கடலுக்குள் எண்ணெய் செல்லாமல் தடுக்க 1KM தூரத்திற்கு எண்ணெய் தடுப்பு மிதவைகள் அமைக்க வேண்டியுள்ளது. தற்போதுவரை 75 மீட்டருக்கு மிதவைகள் அமைத்துள்ளோம். பிற இடங்களில் இருந்து மிதவைகள் வரவைக்க முயற்சி எடுத்து வருகிறோம்" என்று விளக்கமளித்தார்.

"எண்ணெய் கசிவு நடந்து 5 நாள் ஆன பின்னரும்கூட எண்ணெய் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படவில்லை என அரசு கூறும் பதில் திருப்தி அளிக்கவில்லை. இது ஒரு நெருக்கடி நிலை என்பது தெரியவில்லையா?" என பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+