100 நாள் வேலைத்திட்டத்தில் என்னென்ன குறைகள்? குறை தீர்ப்பாளருக்கு போன் போட்டால் 15 நாட்களில் தீர்வு
சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள குறைகள், புகார்களை குறைத்தீர்ப்பாளர்களிடம் கூறினால் 15 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
37 மாவட்டங்களுக்கும் குறைத்தீர்ப்பாளர்களை நியமித்துள்ள அரசு அவர்களது பெயர், தொலைபேசி எண் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டுள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை, தவறுகளை இருக்கும் இடத்திலிருந்தே பொதுமக்கள் உட்பட யார் வேண்டுமானாலும் புகார் கூறலாம். இது தொடர்பான விவரம் வருமாறு.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர் (Ombudsperson) நியமிக்கப்படுகின்றனர்.
அதனடிப்படையில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) என 37 குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலைகோருதல், ஊதியம் அளித்தல், ஊதியம் தாமதமாக வழங்கியதற்கு வழங்கப்படும் இழப்பீடு, பணித்தள வசதிகள் தொடர்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள், அலுவலகத்தில் அல்லது களஆய்வின் போது குறைகேள் அலுவலரிடம் பதிவு செய்யப்படலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
விதி அல்லது சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகள் தவிர அனைத்து புகார்களும், குறைகேள் அலுவலரால் புகார் பெற்ற நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது. மீதமுள்ள புகார்கள் 60 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது.
குறைகேள் அலுவலரால் குறைகள் கையாளப்பட்ட விதம், பணிகளின் தரம் பற்றிய ஆய்வு மற்றும் திட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் போன்றவை அறிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.
37 மாவட்டங்களின் குறைதீர்ப்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுடைய கைப்பேசி எண்களின் விவரம் கீழ்கண்டவாறு தரப்பட்டுள்ளது.
1அரியலூர்
எஸ்.வைத்தீஸ்வரன்
8925811301
2செங்கல்பட்டு
தினேஷ்குமார்மார்ட்டின்
8925811302
3கோயம்புத்தூர்
பி, நவநீதகிருஷ்ணன்
8925811303
4கடலூர்
எம். ஏஞ்சல் கேத்தரின்
8925811304
5தருமபுரி
கே. தௌலத் பாஷா
8925811305
6திண்டுக்கல்
சி.ஓம் பிரகாஷ்
8925811306
7ஈரோடு
எல். பாலகிருஷ்ணன்
8925811307
8கள்ளக்குறிச்சி
பி.இரமேஷ்
8925811308
9காஞ்சிபுரம்
வி.கணேசன்
8925811309
10கன்னியாகுமரி
ஏ. சத்தியசீலன்
8925811310
11கரூர்
என். பாலசுந்தரம்
8925811311
12கிருஷ்ணகிரி
கே.எஸ்.எம்டி.அஸ்மத்துல்லா
8925811314
13மதுரை
பி.பாலசுப்ரமணியன்
8925811315
14மயிலாடுதுறை
டி.மோகன்
8925811316
15நாகப்பட்டினம்
எஸ்.முருகேசன்
8925811317
16நாமக்கல்
டி.சியாமளா
8925811318
17பெரம்பலூர்
பி.ஜானகிராமன்
8925811319
18புதுக்கோட்டை
எம். ரகோத்துமன்
8925811320
19ராமநாதபுரம்
பி.ராமமூர்த்தி
8925811321
20இராணிப்பேட்டை
ஜி.கோபிநாத்
8925811322
21சேலம்
எம்.காந்திமதி
8925811323
22சிவகங்கை
யு.பிரபு
8925811324
23தஞ்சாவூர்
ஆர்.கலைவாணி
8925811325
24நீலகிரி
எம்.என்.சிவதேவ்குமார்
8925811326
25தேனி
கே.சந்திரசேகரன்
8925811328
26தென்காசி
ஆர்.ஜெயகுமார்
8925811329
27தூத்துக்குடி
பி.சேவகபாண்டி
8925811330
28திருச்சிராப்பள்ளி
பி.பாண்டியராஜன்
8925811331
29திருநெல்வேலி
மாணிக் பிரபு
8925811332
30திருப்பத்தூர்
ஜெ. மகாலட்சுமி
8925811338
31திருப்பூர்
எம்.பிரேமலதா
8925811339
32திருவள்ளூர்
ஜே.சைமன் அருள்பிரகாசம்
8925811340
33திருவண்ணாமலை
யு.அண்ணாமலை
8925811341
34திருவாரூர்
வி.கதிரேசன்
8925811342
35வேலூர்
எல்.ரஞ்சிதா
8925811344
36விழுப்புரம்
என்.தஸ்லீம் ஆரிஃப்
8925811345
37விருதுநகர்
வி.பெரியசாமி
8925811346
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளர்களின் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications