மோடியின் தீபாவளி பரிசு.. அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0! சர்ரென சரியும் பொருட்கள் விலை! முழு விவரம் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தீபாவளி பண்டிகை பரிசாக பொதுமக்களுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது. இன்று (செப்டம்பர் 22, 2025) முதல், ஜிஎஸ்டி 2.0 எனப்படும் புதிய வரி அமைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, புதிய வரிவிதிப்பு முறையால் இன்று முதல் விலை குறையும் பொருட்கள், விலை அதிகரிக்கும் பொருட்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

ஜிஎஸ்டி வரி முறையானது முதன்முதலில் 2017-ல் அமல்படுத்தப்பட்டபோது, 0 முதல் 28 சதவீதம் வரை பல்வேறு படிநிலைகளில் வரிகள் விதிக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் அது மிகுந்த சிக்கல்களை உருவாக்கியது. பொதுமக்களுக்கு விலைகள் பற்றிய தெளிவு இல்லாமல் போனது.

அதேபோல், தொழில்துறைகளும் வரி கணக்கிடுவதில் சிரமத்தை எதிர்கொண்டன. இதை சீர்செய்யும் நோக்கில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் பெரிய மாற்றத்தை அறிவித்தது.

GST 2 0 Diwali Gift

ஜிஎஸ்டி 2.0

இதுவரை நடைமுறையில் இருந்த நான்கு வகை ஜிஎஸ்டி வரி படிநிலைகள் சுருக்கப்பட்டு, இனி மூன்று பிரிவுகளாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் மூலம் வரி கணக்கிடுவது எளிமையாகும். மேலும் பல துறைகள், இந்தச் சலுகைகளை நுகர்வோருக்கே கொண்டு செல்லும் வகையில் விலை குறைப்புகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. தற்போதைய சூழலில், 5% வரிக்குள் அத்தியாவசியப் பொருட்களும்,18% பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 40% வரி விகிதத்தில், புகையிலை, மதுபானம், பந்தயம், ஆன்லைன் கேமிங் போன்றவை அடக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்கள்

இந்நிலையில், புதிய வரிவிதிப்பு முறையால் இன்று முதல் விலை குறையும் பொருட்கள், விலை அதிகரிக்கும் பொருட்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம். அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி 12%ல் இருந்து, 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேஸ்ட், சோப்பு, ஷாம்பு, பிஸ்கட், ஸ்நாக்ஸ், ஜூஸ், நெய், கன்டென்ஸ்டு பால் போன்ற தினசரி பயன்பாட்டு பொருட்கள், மிதிவண்டிகள், எழுதுப்பொருட்கள், குறைந்த விலை ஆடைகள் மற்றும் காலணிகளின் ஆகியவற்றில் விலை குறையவுள்ளது.

விலை குறைவு

மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரணங்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18% ஆக குறைந்துள்ள நிலையில், ஏர் கண்டிஷனர், ஃப்ரிட்ஜ், டிஷ்வாஷர், பெரிய திரை டிவிகள், சிமெண்டு ஆகியவற்றின் விலை குறையும், ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை, சிறிய கார்கள் (1200cc-க்கு குறைவான எஞ்சின்) மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை குறையும். ஆனால் பெரிய கார்கள் மற்றும் சொகுசு எஸ்யூவிகள் முந்தைய உயர் வரியிலேயே தொடரும். இதே போல், காப்பீடு மற்றும் நிதிச் சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

விலை அதிகரிக்கும் பொருட்கள்

புகையிலை பொருட்கள், மதுபானம், பான் மசாலா, ஆன்லைன் பந்தயம் மற்றும் கேமிங் பிளாட்ஃபார்ம்கள் என இவை அனைத்தும் 40% உயர் வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால், விலை அதிகரிக்கிறது. எரிபொருட்கள் இன்னும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படாததால், அதின் விலையில் மாற்றமில்லை. வைரங்கள், விலையுயர்ந்த கற்கள் போன்ற ஆபரணங்களும் பழைய வரியிலேயே தொடரும். ஜிஎஸ்டி 2.0 மூலம் பொதுமக்களுக்கு நிவாரணமும், அரசுக்கு வருவாயும் ஒரே நேரத்தில் கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவதால், மக்களுக்கு செலவு குறையும். அதே சமயம், புகையிலை, மது போன்றவற்றுக்கு அதிக வரி விதிப்பதால் அரசு வருவாய் நிலையாக கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+