ஜிஎஸ்டி குறைந்தாலும் விலை குறையலையா? காரணம் இதுதான்! முழுசா தெரிஞ்சுக்கோங்க!
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி, (ஜிஎஸ்டி) இரண்டு அடுக்குகளாக குறைக்கப்படுவதாக சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த வரி குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும் மளிகை கடைகளில் பல்வேறு பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை என்று பொது மக்கள் புலம்பி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பது பரவலான கேள்வியாக இருந்திருக்கிறது.
மத்திய அரசு அறிவித்ததை போல, வரி அடுக்குகள் குறைக்கப்பட்டாலும் ஜிஎஸ்டி அமைப்பில் இன்னொரு முக்கியமான பிரச்சனை இருக்கிறது. அதுதான் ஐடிசி எனப்படும் வரி உள்ளீடு கழிவு (input tax credit - ITC).

உலகம் முழுவதும் மொத்தம் உள்ள 193நாடுகளில், 175 நாடுகள் ஜிஎஸ்டியை பின்பற்றி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான நாடுகளில் ஐடிசி கழிவு அமலில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உணவு, பானங்கள், உடல் நலம் மற்றும் அழகு சேவைகள், உறுப்பினர் கட்டணங்கள், மோட்டார் வாகனங்கள், கட்டுமான பொருட்கள், விடுமுறை பயணங்கள், தனி விமான பயணங்கள், ஹோட்டல் தங்கும் வசதிகள் ஆகியவற்றுக்கு ITC கிடையாது. இதனால்தான் விலை குறையாமல் இருக்கிறது.
ITC இல்லாததால் சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். இந்தியாவின் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி உண்டு ஆனால் ITC கிடையாது. ஒரு பைக்கை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். பைக் தயாரிக்க இரும்பு, டயர்கள், எஞ்சின் பாகங்கள் இதெல்லாம் தேவை. இப்படி
மூலப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50,000 என்று வைத்துக் கொள்வோம். இந்த மூலப் பொருட்கள் வாங்க ஜிஎஸ்டி கட்ட வேண்டும் 18 சதவீதம் ஜிஎஸ்டி என்றால் ரூ.9000 வருகிறது.
இப்போது மூலப்பொருட்களைக் கொண்டு பைக் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செலவு ரூ.10,000 என வைத்துக் கொள்வோம். பைக் ரூ. 80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி இருக்கிறது என்பதால் 18 சதவீதம் ஜிஎஸ்டியை சேர்த்தால் கூடுதலாக ரூ. 14,400 வரும். எனவே ஒரு பைக்கின் மொத்த விலை ரூ.94,400
மூலப்பொருட்களின் விலை - ரூ.50,000
மூலப் பொருட்களுக்கான 18 சதவிகித ஜிஎஸ்டி - ரூ.9,000
பைக்கின் விலை - ரூ.80,000
பைக்குக்கு 18% ஜிஎஸ்டி - ரூ.14,000
மொத்தமாக பைக்கின் விலை ரூ.94,4000
இந்தியாவில் வாகனங்களுக்கு ITC இருப்பின், பைக்குக்கான ஜிஎஸ்டியில், மூலப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி கழிக்கப்பட்டிருக்கும். அதாவது ரூ.14,400ல் ரூ.9,000 கழிக்கப்பட்டு ரூ.5,400 மட்டும் பைக்கின் கூடுதல் விலையாக இருக்கும். இதன் மூலம் மொத்தமாக பைக் ரூ.85,400 என விற்பனை செய்யப்பட்டிருக்கும். வாங்குபவர்களும் விலை குறைவாக இருப்பதால் வாங்கி செல்வார்கள். ஆனால், ITC கழிவு இல்லை என்பதால் அதே விலைக்குதான் விற்பனை ஆகும்.
இப்படி ஐடிசி கழிவு இல்லாத ஒவ்வொரு பொருட்களுக்கும் விலை குறையாது. சாதாரண மளிகை பொருட்களுக்கும் இந்த விதி பொருந்தும். இதனால்தான் விலை குறையாமல் பொருட்கள் இன்னமும் விற்பனை ஆகின்றன.












Click it and Unblock the Notifications