தீபாவளி போனஸ்.. மோடி, நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு.. தமிழ்நாடு, கேரளாவிற்கு ட்விஸ்ட்
சென்னை: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி விகிதம் 5, 18 சதவீதம் என மாற்றம் செய்யப்படும் என்று தீபாவளி போனஸ் ஆக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதன் காரணமாக மக்களுக்கு லாபம் கிடைக்கும் என்கிற நிலையில், மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக கேரளாவிற்கு 5000 கோடி அளவிற்கும், தமிழ்நாட்டிற்கு குறைந்தது 7000 கோடி அளவிற்கும் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தம் ஜி.எஸ்.டி. வரியில் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏழைகள், நடுத்தர வர்த்தகத்தினர், ஒவ்வொரு சிறு மற்றும் குறு தொழில் முனைவோரும் அதன் மூலம் பலனடைய போகிறார்கள். தீபாவளியையொட்டி நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது என்றார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வரைவு அறிக்கை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்றார்.

40 சதவீதம் வரி எதற்கு
அதன்படி மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பி உள்ள. வரைவு அறிக்கையில் இனி 5 மற்றும் 18 சதவீத வரி என இரண்டு அடுக்கும், விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் தற்போது ஜி.எஸ்.டி.யில் 'பாக்கெட் பிராண்டிங்' செய்யப்படாத அத்தியாவசிய பொருட்கள், புதிய காய்கறி, தானியம் போன்றவை பூஜ்ஜியம் வரி சதவீதத்தில் இருக்கிறது.
மேலும் தேநீர், சமையல் எண்ணெய், சமையல் கியாஸ், மருந்துகள், பொது போக்குவரத்து என 14 சதவீத பொருட்கள் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியின் கீழ் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன வரிகள்
அதேபோல் நெய், பழச்சாறு, கம்ப்யூட்டர், பேனா, பென்சில் போன்ற சுமார் 14 சதவீத பொருட்கள் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியின் கீழ் வர உள்ளதாக வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெரும்பாலான சேவைகள், தொழில் பொருட்கள், பற்பசை, அழகு சாதனப் பொருட்கள் என சுமார் 43 சதவீத பொருட்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கீழ் வர இருக்கிறது. இதேபோல் கார்கள், ஏ.சி., புகையிலை போன்ற ஆடம்பர, "சின்" பொருட்கள் என சுமார் 19 சதவீத பொருட்கள் 28 சதவீத ஜி.எஸ்.டி. கீழ் வர இருக்கிறது. இதுதவிர வைரக்கல், அரிய கற்கள் போன்றவை 0.25 சதவீத வரியிலும், தங்கம்-நகைகள் போன்றவை 3 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. மேலும் புகையிலை, ஆடம்பர கார்கள் போன்றவைக்கு 28 சதவீத வரியுடன் செஸ் வரியும் இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள்
மக்களிடம் இருந்து ஜிஎஸ்டி வரி மூலம் வரும் பணத்தை வைத்து தான் அரசுகள் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துகின்றன. பட்ஜெட்டையே இந்த வரியை வைத்து தான் மேற்கொள்வார்கள்.. இந்த ஜி.எஸ்.டி தொகையை மத்திய அரசு-மாநில அரசுகள் தலா 50 சதவீதம் என பிரித்து கொள்வார்கள். மத்திய அரசு வாங்கும் 50 சதவீதத்தில் கணிசமான நிதியை அந்த மாநிலத்தின் பல்வேறு மேம்பாட்டிற்கு செலவு செய்யும். அதேபோல் வறுமையில் உள்ள மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும். அதேபோல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு லாப நோக்கமின்றி அரசு செலவிடும். இதுதவிர மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம், நிர்வாகம் என பல்வேறு செலவுகளை அரசு செய்யும். இதுதான் இப்போது உள்ள நடைமுறை.
இரண்டு விகிதம்
இந்தநிலையில் மத்திய அரசு இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என "இரண்டு விகித கட்டமைப்பு" முறையை கொண்டுவர முடிவு செய்து, அதனை அதிரடியாக சுதந்திர தினத்தில் அறிவித்து, உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் 5 சதவீத வரியிலும், பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் 18 சதவீதத்திலும், ஆடம்பரம் மற்றும் தீங்கு விளைவிக்கும் புகையிலை போன்ற பொருட்கள் 40 சதவீத வரிக்கு உட்பட்டு வரப்போகிறது.
மாநிலங்களுக்கு ட்விஸ்ட்
அதேபோல் தற்போதைய 12 சதவீத பொருட்கள் 5 சதவீதத்திற்கும், 28 சதவீத பொருட்கள் 18 சதவீதத்திற்கும், அதில் சில 40 சதவீதத்திற்கும் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு பல பொருட்களின் விலை குறைவாக கிடைக்க போகிறது. ஆனால் இது மாநில அரசுகளும் சம்பந்தப்பட்டவை என்பதால். மத்திய அரசுக்கு மட்டுமின்றி, மாநில அரசுக்கும் ஜி.எஸ்.டி. பகிர்வு குறைந்துவிடும். இதனால் மாநிலங்கள் அதிர்ச்சியில் உள்ளன.
7000 கோடி இழப்பு
எனினும் இதனால் ஏற்பட போகும் இந்த இழப்புக்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகள் குரல் எழுப்ப தயாராகி வருகின்றன. கேரளாவிற்கு மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தமிழகத்திற்கு குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இழப்பு இருக்காது
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் மத்திய அரசு வட்டாரங்கள், ஜி.எஸ்.டி. வரி குறைவதால் அந்த பொருட்களின் விற்பனை அதிகமாகும் என்று நம்புகிறது. 28 சதவீத வரியில் ஒரு பொருள் 50 விற்பனையாகிறது என்றால், 18 சதவீதம் ஆகும் போது 100 என்கிற அளவில் விற்பனையாக வாய்ப்ப்பு உள்ளது. எனவே இழப்பு குறையும் என்கிறது மத்திய அரசு வட்டாரங்கள்.
நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்
ஜி.எஸ்.டி. 2 அடுக்குகள் கொண்டதாக மாற்றப்படுவது குறித்து மாநில மந்திரிகள் குழு நாளையும், நாளை மறுநாளும் ஆலோசனை நடைபெற உள்ளது, இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். அந்த கூட்டத்தில் 12 சதவீத வரிவிதிப்பில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்பட உள்ளது. 28 சதவீத வரிவிதிப்பில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்பட உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ஜிஎஸ்டி குழுவின் அமைப்பளாராக உள்ள பீகார் மாநில துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, உத்தரபிரதேச நிதியமைச்சர் சுரேஷ்குமார் கன்னா, ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங், மேற்கு வங்காள நிதி அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா, கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர்கிருஷ்ண பைரே கவுடா, கேரள நிதி மந்திரி கே.என்.பாலகோபால் ஆகியோர் அடங்கிய குழு டெல்லியில் விவாதிக்கிறது. இதில் தான் மாநிலங்கள் எதிர்க்கின்றனவா அல்லது என்ன கேட்க போகின்றன என்பது தெரியவரும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications