ஹப்பா.. நல்லகாலம் தொடங்கியது.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே நடந்த சம்பவம்.. சூப்பர்!
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மழை நீர் வெளியேற்றும் அமைப்பிற்கான பணிகள் முடிந்து உள்ளன. உள்ளே பணிகள் முடிந்த நிலையில் வெளியில் பணிகள் தொடங்கி உள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தீவிரம் அடைந்துள்ளது, பெரும்பாலும் தீபாவளிக்கு முன் பேருந்து நிலையம் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே உள்ள பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று. இப்படிப்பட்ட பேருந்து நிலையம் இருந்தும் கூட அதை சரியாக அரசு பராமரிக்கவில்லை. அதிலும் கடந்த 10 வருடங்களில் கோயம்பேடு பேருந்து நிலையம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது.

அரசு நேரடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதே இதற்கு காரணம். அதே சமயம் இது போன்ற பராமரிப்பு பணிகளை தனியாரிடம் கொடுத்துவிட்டு, அவர்களிடம் கேள்வி கேட்கும் பட்சத்தில், தனியார் அமைப்புகள் இதை சிறப்பாக செய்யும்.
சில வெளிநாடுகளில் இது போல தனியார் அமைப்புகளே ஒப்பந்தம் எடுத்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக முக்கியமான ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது.
பேருந்து நிலையம்: கடந்த சில வாரங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.
ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போனது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.
இதனால் அங்கே மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை.
மழை: கடந்த மழையில் இங்கே கடுமையாக தண்ணீர் தேங்கியது. சர்வதேச நாடுகளில் இருக்கும் வகையில் உலக தரத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் சென்னையில் அகலமான சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இங்கே மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் கடந்த முறை தண்ணீர் தேங்கியது. இதையடுத்து இங்கே உடனே வடிகால் வசதி அமைக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கே பணிகள் நடந்து வருகின்றன.
உண்மையான காரணம்: ஆனால் இங்கே வடிகால் வசதி அமைக்கப்படாதது மட்டும் தண்ணீர் தேங்க காரணம் இல்லை. உண்மையில் கிளாம்பாக்கத்தில் தண்ணீர் தேங்க காரணமே வேறு என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர் கூறுகையில், இந்த பாக்கம் என்று முடியும் பகுதிகள் எல்லாமே ஒரு காலத்தில் தண்ணீர் நிரம்பிய நீர் ஆதாரம் கொண்ட ஏரிகள், குளங்களை கொண்ட பகுதிகள்தான். இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே செய்யப்பட்ட சில ஆக்கிரமிப்புகள் இங்கே தண்ணீர் தேங்கவும் காரணமாக உள்ளது.
அதை விட இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டு உள்ளது. பேருந்து நிலையத்தின் மையப்பகுதி தண்ணீர் தேங்கும் வகையில் தாழ்வாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பகுதியே தாழ்வான இடத்தில் உள்ளது. இதனால் தண்ணீர் எளிதாக சென்று தேங்கிவிடுகிறது. பிளானிங் செய்யப்பட்ட சொதப்பல்தான் தண்ணீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மழை நீர் வெளியேற்றும் அமைப்பிற்கான பணிகள் முடிந்து உள்ளது. இதையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே.. அதாவது ஜிஎஸ்டி சாலையில் மழை நீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
அங்கே சாலை ஓரத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ரூபாய் 13 கோடி செலவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கிறது. அதன்படி, 742 மீட்டர் நீளமும், குறுக்கே 65 மீட்டர் நீளமும் கொண்ட வகையில் அமைக்கப்பட உள்ளது. ஜி எஸ் டி சாலையின் மேற்கு பகுதியில் இந்த பாதை அமைக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் ஏரிக்கு மழை நீர் கொண்டு செல்லும் வகையில் இந்த வடிகால் அமைக்கப்பட உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications