சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்! திடீரென செத்து மடிந்த 20-க்கும் மேற்பட்ட நாரைகள், கொக்குகள்!
சென்னை: சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் 20-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்ததால் அந்த பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் பூங்காவை காண வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் ஏராளமான பறவைகள் உள்ளன. இங்கு வேடந்தாங்கலில் இருந்து இனப்பெருக்கம் செய்வதற்காக ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளன.

இந்த நிலையில் சிறுவர் பூங்காவில் இன்று காலை முதலே பறவைகள் ஒவ்வொன்றாக இறந்த வண்ணம் இருந்தன. கரண்டிவாயன், நாரை, கூழைக்கடா, செங்கால் நாரை, கொக்குகள் உள்பட 20-க்குமே் மேற்பட்ட பறவை இறந்துள்ளன.
இவற்றை சோதனை செய்ததில் அவை பறவைக் காய்ச்சலால் இறந்தது தெரியவந்தது. பொதுவாக வெயில் காலங்களில் ஒரு பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பறவைகளை இடமாற்றம் செய்வது வழக்கம்.
ஆனால் தற்போது பறவை காய்ச்சல் எதிரொலியாக அது போல் பறவைகளை இடமாற்றமும் செய்ய முடியாது. இதனால் பூங்காவுக்கு வரும் மக்களின் பாதுகாப்பு கருதி, பூங்கா மூடப்பட்டுள்ளது. பறவைகளின் எச்சம், அதன் பாகங்கள், இரக்கைகள், முடிகள் உள்ளிட்டவைகளின் மூலம் வைரஸ் கிருமி மக்களுக்கு தொற்றும் என்பதால் பூங்கா மூடப்பட்டுள்ளது.
அது போல் மற்ற பறவைகளுக்கு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு அவை சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி மற்றும் அடையாறு போன்ற மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் காகங்களும், புறாக்களும் ஆங்காங்கே இறந்து கிடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இதற்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடுகின்றனர்:
கடும் வெயில் (Heat Stroke): சென்னையில் தற்போது நிலவும் அதீத வெப்பம் காரணமாகப் பறவைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்பட்டு, மாரடைப்பு போன்ற பாதிப்புகளால் உயிரிழக்க வாய்ப்புள்ளது.
பறவைக் காய்ச்சல் அச்சம்: ஒரு சில பகுதிகளில் தொடர்ச்சியாகப் பறவைகள் இறப்பதால், இது 'பறவைக் காய்ச்சல்' (Bird Flu) போன்ற வைரஸ் பாதிப்பாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
விஷம் கலந்த உணவு: குறிப்பாகப் புறாக்கள் அதிகம் கூடும் இடங்களில், அவற்றுக்கு வைக்கப்படும் தானியங்களில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளோ அல்லது மாசடைந்த உணவோ காரணமாக இருக்கலாம்.
3. அரசின் நடவடிக்கை
இறந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (TANUVAS) ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே இது தொற்று நோயால் ஏற்பட்டதா அல்லது வெப்பத்தால் ஏற்பட்டதா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியும்.
பொதுமக்கள் செய்ய வேண்டியவை:
பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டால், வெறும் கையால் தொட வேண்டாம்.
உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கோ அல்லது கால்நடை பராமரிப்புத் துறைக்கோ தகவல் தெரிவிக்கவும்.
இந்தக் கோடை காலத்தில் பறவைகளுக்கு உதவ, உங்கள் வீட்டு மொட்டை மாடி அல்லது பால்கனியில் சிறிய பாத்திரத்தில் சுத்தமான குடிநீர் மற்றும் தானியங்களை வைக்கலாம்.












Click it and Unblock the Notifications