விமான விபத்து! 1950-ல் லால் பகதூர் சாஸ்திரி செய்ததை மோடியும் செய்யனும்.. சுப்பிரமணிய சுவாமி
சென்னை: 1950 ஆம் ஆண்டு ரயில் தடம் புரண்ட போது லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே இதே தார்மீக அடிப்படையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் நாயுடு ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். மேலும் அப்பொதுதான் நியாயமான, சுதந்திரமான விசாரணை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் சுப்பிரமணியணியன் சுவாமி கூறியிருப்பதாவது:-

சுற்றி சுற்றிதான் வருகிறார்கள்
1950 ஆம் ஆண்டு ரயில் தடம் புரண்ட போது லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே இதே தார்மீக அடிப்படையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் நாயுடு ஆகியோர் பதவி விலக வேண்டும். அப்போது தான் நியாயமான சுதந்திரமான விசாரணை நடைபெறும். மோடியும் அவரது சகாக்களும் இதுவரை சுற்றி சுற்றிதான் வருகிறார்கள். இது முதலில் நிறுத்தப்பட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்தாலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருபவர் சுப்பிரமணியன் சுவாமி. தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வரும் சுப்பிரமணியன் சுவாமி இன்று நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக பதிவிட்டு மோடியை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டையே உலுக்கிய விபத்து
முன்னதாக இன்று பிற்பகல் 1.40 மணியளவில் நாட்டையே உலுக்கும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஏஐ171 (AI)171 என்ற எண் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானது.
உடல்களை அடையாளம் காண
ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இதுவரை விபத்தில் சிக்கியது இல்லை என்று சொல்லப்படுகிறது. மிகவும் பாதுகாப்பான விமானமாக கருதப்படும் போயிங் டீரிம்லைனர் விமானத்தை ஏர் இந்தியா கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கியுள்ளது. ஏர் இந்தியா 171 என்ற எண் கொண்ட இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்தனர். இந்த விமான விபத்தில் ஒருவரும் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை என்று அகமதாபாத் சுகாதாரத்துறை தெரிவித்தது.
அகமதாபாத் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை செயலலாளர் தனஞ்செய் திரிவேதி தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் உறவினர்களிடம் டிஎன்.ஏ மாதிரிகளை சேகரிக்க மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
2 கைக் குழந்தைகள்
விமானத்தில் 2 கைக் குழந்தைகள், 11 சிறுவர் - சிறுமிகள் பயணம் செய்து இருக்கிறார்கள். விமானம் கீழே விழும்போது மேகானி நகர் பகுதியில் உள்ள பிஜே மருத்துவ கல்லூரியின் விடுதி கட்டிடத்தில் மோதி விழுந்துள்ளது. புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானதால், விமானத்தில் எரிபொருள் அதிகளவில் இருந்ததால் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதியே கரும்புகையானது.
விபத்து பற்றி அறிந்ததும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், மீட்பு குழுவினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விடுதி கட்டிடத்தின் பெரும்பாலானவை இடிந்து விழுந்துள்ளன. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. எப்படி விபத்து நேரிட்டது என்பது பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications