ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! கமிஷனர் அமல்ராஜ் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை மாநகர கமிஷனர் அமல்ராஜின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது போல் சிறுமிகளை சீரழிக்க உதவியதாக வீரமணியின் உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் ஜாமீன் கிடைக்காது. இந்த சட்டத்தின் கீழ் விசாரணையே இல்லாமல் ஓராண்டு வரை ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க முடியும்.

gem veeramani

பொதுவாக இந்த சட்டம் கள்ளச்சாராயத்தில் ஈடுபடுவோர், மணல், உணவு கடத்தல்காரர்கள், பாலியல் குற்றவாளிகள், சைபர் கிரைம் குற்றவாளிகள், நில ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளிட்டோர் மீது பாயும்.

கடந்த பல ஆண்டுகளாக தொழிலதிபர் ஜெம் வீரமணி என்பவர் சிறுமிகளை படிக்க வைப்பதாக கூறி அவர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் பேரில் ஜெம் வீரமணி கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

அது போல் அவருக்கு உதவியாக இருந்ததாக உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வீரமணி தனது பெயர் எஃப்ஐஆரில் வராமல் இருக்க போலீஸார் முதல் முக்கிய அரசியல் புள்ளிகள் வரை ரூ 70 கோடி பணத்தை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தில் வீரமணியின் பழைய உதவியாளர் கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சாந்தியும் மகேந்திர சிம்ஹனும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் போலீஸார் உள்ளிட்டோரே சாட்சியாக இருப்பதால் எங்களுக்கு ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைத்துவிடுவோம் என அச்சம் இல்லை. எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல் துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அவர்களின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+