பெரியார் ஊர்வலம்.. கி.வீரமணியின் எடிட் செய்யப்பட்ட வீடியோ.. ஷேர் செய்த குருமூர்த்தி.. சர்ச்சை!
பெரியாரின் சேலம் ஊர்வலம் குறித்து திக தலைவர் கி. வீரமணி பேசும் எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பகிர்ந்துள்ளார்.
சென்னை: பெரியாரின் சேலம் ஊர்வலம் குறித்து திக தலைவர் கி. வீரமணி பேசும் எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பகிர்ந்துள்ளார். அவரின் இந்த செயல் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முக்கியமாக அரசியல்வாதிகள், திரை உலகினர், தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
1971ல் ராமருக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இதில் ராமருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. சீதை புகைப்படம் எடுத்து செல்லப்பட்டது, இது மிகவும் தவறு என்று ரஜினி குறிப்பிட்டார். மேலும் நடிகர் ரஜினி காந்த் பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்றுள்ளார்.
|
வீடியோ வெளியிட்டார்
இந்த நிலையில் 1971ல் நடந்த இந்த சம்பவம் குறித்து திக தலைவர் கி வீரமணி பேசும் வீடியோ ஒன்றை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பெரியார் ராமரை செருப்பால் அடித்தார். சேலம் மாநாட்டில் செருப்பால் அடித்தார். அதன்பின் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வென்றது. திமுக அதற்கு முன் பெற்ற இடங்களை விட அதிக இடங்களை அந்த தேர்தலில் பெற்றது. சாமி படத்தை அவமதித்ததும் இதற்கு காரணம் என்று கி வீரமணி குறிப்பிடுவதாக வீடியோவில் இருந்தது.

வைரல்
ஆனால் இந்த வீடியோ வெட்டி ஒட்டப்பட்டது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. வீரமணியின் பேச்சை இடை இடையே கட் செய்து, அவர் வேறு இடத்தில் ராமர் என்று சொன்னதை இணைத்து பொய்யாக வீடியோ உருவாக்கி உள்ளனர். இந்திராகாந்தி பேட்டி குறித்து அதே கூட்டத்தில் வேறு இடத்தில் பேசியதை வெட்டி இடையே இணைத்து, பொய்யாக எடிட் செய்தது நிரூபணம் ஆகியுள்ளது. சிலர் இந்த வீடியோவை எடிட் செய்து பரப்பி இருக்கிறார்கள் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது .

சுட்டிக்காட்டியுள்ளனர்
இந்த பொய்யான வீடியோவைத்தான் குருமூர்த்தி பகிர்ந்துள்ளார். இதை பலரும் ஷேர் செய்தும் வருகிறார்கள். இந்த நிலையில் பொய்யான செய்திகளை கண்டுபிடிக்கும் தளமான யூடர்ன் போன்ற தளங்கள் இதன் உண்மை தன்மையை ஆராய்ந்துள்ளது. இந்த வீடியோ முழுக்க முழுக்க வெட்டி ஒட்டப்பட்டது என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. ஆனால் குருமூர்த்தி இந்த வீடியோவை டெலிட் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
உண்மை
இதை இணையத்தில் பலரும் சுட்டிக்காட்டி வருகிறார்கள். நீங்கள் ஏன் தவறான வீடியோவை பகிர்ந்துள்ளீர்கள். ஏன் விஷயத்தை திசை திருப்புகிறீர்கள் என்று பலரும் கேட்டு வருகிறார்கள். உண்மையான வீடியோவை பலர் ஷேர் செய்து, அவருக்கு விளக்கி வருகிறார்கள். இந்த பொய்யான வீடியோ சர்ச்சை இணையம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications