அதிமுகவுக்கு சிக்கல்..அடுத்த கட்டத்தில் குட்கா முறைகேடு வழக்கு..மாஜி அமைச்சர்கள் கைக்கு போன காப்பி!
சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்பட 24 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்களை சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஏற்கனவே 2020ம் ஆண்டு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை சிபிஐ தாக்கல் செய்தது. இந்நிலையில், தற்போது கூடுதல் குற்றப் பத்திரிகையில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யவும் இருப்பு வைக்கவும் தடை விதிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருள் விற்கப்பட்டதாக புகார் எழுந்தது.

நிலையில் இது தொடர்பாக வரி ஏய்ப்பு புகாரில் வருமானவரித்துறை 2016 ஆம் ஆண்டு சோதனை நடத்தியது. இதில் குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடந்து குட்கா முறைகேடு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. சஞ்சய் பாபா முன் கடந்த 9 தேதி விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, ஓய்வு பெற டி.ஜி.பிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு கடந்த ஆண்டு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, சுமார் 250 பக்க கூடுதல் குற்றபத்திரிகை, ஆவணங்கள் என சுமார் 20 ஆயிரம் பக்கங்களை கொண்ட நகல்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, விசாரணையை தள்ளிவைத்த நீதிபதி, கூடுதல் குற்றபத்திரிகை பெற்றுக் கொள்வதற்காக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் மூத்த பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 492 ஆவணங்களை கொண்ட மின்னணு குற்ற பத்திரிக்கை ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கள், பிவி ரமணா, முன்னாள் காவல் ஆணையர் சார்ஜ் உள்ளிட்ட 24 பேருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் நகலை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications