ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி பிரிவதாக அறிவிப்பு.. 11 ஆண்டு கால மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்கள் இருவரும் விவாரத்து செய்கிறோம் என்று நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி தம்பதி அறிவித்துள்ளனர். எங்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகியுள்ளது. நன்கு யோசித்து தான் முடிவெடுத்துள்ளோம் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்தார். குறிப்பாக ஆடுகளம் படத்தில் அவரது இசை பலராலும் பாராட்டப்பெற்றது. தொடர்ந்து இசையமைப்பாளராக பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து வந்த ஜிவி பிரகாஷ் திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார்.

GV Prakash And Saindhavi Get Divorced

அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றே வருகின்றன. குறிப்பாக டார்லிங், திரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். தொடர்ந்து தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். இதேபோல் படத்தில் ஹீரோவாக நடித்து வந்தாலும், தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். பல பாடல்களையும் பாடியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் வாசினிமாவில் பிசியாக இருந்தாலும் குடும்பத்தையும் கவனித்தே வந்தார். ஜிவி பிரகாஷ் குமாருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. வயலின் கலைஞரான சைந்தவியை காதலித்து ஜிவி பிரகாஷ் திருமணம் செய்தார். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அன்வி என்ற மகள் பிறந்தாள்.

மனைவி சைந்தவியுடன் மகிழ்ச்சியாகவே ஜிவி பிரகாஷ் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் திருமண நாளை இருவரும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். இந்த நிலையில் தான், இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கடந்த 2 நாட்களாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் இதனை மெய்பிக்கும் விதமாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ட்வீட் பதிவிட்டுள்ளனர்.

இதில், சைந்தவி பதிவிட்டுள்ள ட்வீ பதிவில், "ஜிவி பிரகாஷும் நானும் பிரிவதாக முடிவு செய்து இருக்கிறோம். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். நன்கு யோசித்து தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். நீண்ட யோசனைக்கு பிறகு தான் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறோம்.

எங்களுக்குள் தனிப்பட்ட இந்த முடிவை ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது தேவை எங்களது பிரவேசியை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல், ஜிவி பிரகாஷ்குமாரும் ட்வீட் பதிவினை வெளியிட்டுள்ளார். இருவரும் பிரிவதாக முடிவு செய்து இருக்கிறோம். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். நன்கு யோசித்து தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். எங்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறோம். மிகவும் தனிப்பட்ட முடிவை எடுத்துள்ள இந்த நேரத்தில் தங்களது தனிமனித வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம் என்று ட்வீட் போட்டுள்ளார்.

பள்ளிகாலம் முதலே காதலித்து வந்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் 2013ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் 'எள்ளுவய பூக்கலையே', 'பிறைதேடும் இரவிலே', 'கையிலே ஆகாசம்' உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை சைந்தவி பாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+