Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்லவேளை தப்பிச்சோம்.. நீர்வளத்துறையை மிஸ் செய்த குமாரசாமி.. தமிழ்நாட்டிற்கு ஏன் நல்லது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் மதசார்பாற்ற ஜனதா தளம் தலைவர் அமைச்சர் குமாரசாமிக்கு கனரக தொழில்துறை அமைச்சர் மற்றும் எஃகு துறை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

கர்நாடகாவில் இருந்து குமாரசாமி, நிர்மலா உட்பட 5 பேர் மத்திய அமைச்சராக பதவி ஏற்று உள்ளனர். மாநிலத்தைச் சேர்ந்த பிரகலாத் ஜோஷி, வி. சோமன்னா மற்றும் ஷோபா கரந்த்லாஜே ஆகியோரும் அமைச்சகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். நிர்மலா சீதாராமன் மீண்டும் நிதி அமைச்சர் ஆகி இருக்கிறார்.

lok sabha election 2024 palar cauvery 2024

நீர் வளத்துறை - வேளாண் துறை: முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சர் அல்லது வேளாண் துறை பதவி ஆந்திராவின் தெலுங்கு தேசம் மற்றும் கர்நாடகாவின் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பாக்கப்பட்டது. நீர் வளத்துறை - வேளாண் துறை இரண்டையும் கைப்பற்ற குமாரசாமி மற்றும் சந்திரபாபு நாயுடு தீவிரமாக முயன்றன .

முக்கியமாக குமாரசாமி விவசாய வாக்காளர்களை நம்பி இருப்பதால் நீர்வளத்துறை அமைச்சர் அல்லது வேளாண் துறை பதவியை வாங்க முயன்று வந்தார். அப்படி மட்டும் நடந்தால் தமிழ்நாட்டுக்கான பாலாறு, காவிரி நீர் உரிமைகள் ஒட்டுமொத்தமாக காவு கொள்ளப்படும் பேராபத்து இருந்தது.

பாலாற்றின் குறுக்கே அணையை நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்டி இருக்கும். இல்லையென்றால் மேகதாதுவில் குமாரசாமி தனது துறையை பயன்படுத்தி அணையை கட்டி இருப்பார்.

தமிழ்நாட்டிற்கு நல்லது: ஆனால் தற்போது சிவராஜ் சிங் சவுகான் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தை கைப்பற்றி உள்ளார். சி ஆர் பாட்டீல் நீர்வளத்துறையை கைப்பற்றி உள்ளார்.

குமாரசாமிக்கு கனரக தொழில்துறை அமைச்சர் மற்றும் எஃகு துறை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் தமிழ்நாடு அணை ஆபத்தில் இருந்து தப்பி உள்ளது.

அமைச்சர்கள் லிஸ்ட்:

1. ராஜ் நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர்.

2. அமித் ஷா

உள்துறை அமைச்சர்; மற்றும்

கூட்டுறவு அமைச்சர்.

3. நிதின் ஜெய்ராம் கட்கரி

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.

4. ஜகத் பிரகாஷ் நத்தா

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்; மற்றும்

ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்.

5. சிவராஜ் சிங் சவுகான்

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்; மற்றும்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்.

6. நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சர்; மற்றும்

கார்ப்பரேட் விவகார அமைச்சர்.

7. டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்

வெளிவிவகார அமைச்சர்.

8. மனோகர் லால்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர்; மற்றும்

மின்துறை அமைச்சர்.

9. எச்.டி.குமாரசாமி

கனரக தொழில்துறை அமைச்சர்; மற்றும்

எஃகு அமைச்சர்.

10. பியூஷ் கோயல்

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்.

11. தர்மேந்திர பிரதான்

கல்வி அமைச்சர்.

12. ஜிதன் ராம் மஞ்சி

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர்.

13. லாலன் சிங் என்கிற ராஜீவ் ரஞ்சன் சிங்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்; மற்றும்

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்.

14. சர்பானந்தா சோனோவால்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர்.

15. டாக்டர் வீரேந்திர குமார்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்.

16. கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு

சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்.

17. பிரலாத் ஜோஷி
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர்; மற்றும்

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்.

18. ஜுவல் ஓரம்

பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்.

19. கிரிராஜ் சிங்

ஜவுளித்துறை அமைச்சர்.

20. அஸ்வினி வைஷ்ணவ்

ரயில்வே அமைச்சர்;

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர்; மற்றும்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.

21. ஜோதிராதித்யா எம்.சிந்தியா

தகவல் தொடர்பு அமைச்சர்; மற்றும்

வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்.

22. பூபேந்தர் யாதவ்

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர்.

23. கஜேந்திர சிங் ஷெகாவத்

கலாச்சார அமைச்சர்; மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சர்.

24. அன்னபூர்ணா தேவி

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்

25. கிரண் ரிஜிஜு

பாராளுமன்ற விவகார அமைச்சர்; மற்றும்

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்.

26. ஹர்தீப் சிங் பூரி

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்

27. டாக்டர் மன்சுக் மாண்டவியா

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்; மற்றும்

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.

28. ஜி. கிஷன் ரெட்டி

நிலக்கரி அமைச்சர்; மற்றும்

சுரங்கத்துறை அமைச்சர்.

29. சிராக் பாஸ்வான்

உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர்.

30. சி ஆர் பாட்டீல்

ஜல் சக்தி அமைச்சர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+