படுபயங்கரமான போட்டோ.. ரிலீஸ் செய்த பாஜக எச்.ராஜா.. செம்ம உக்கிரம்.. திகிலில் திருச்சி போலீஸ்!
சென்னை: பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் திருச்சியில் கைது செய்யப்பட்ட போது எடுத்த படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் இதுவரை அவர் காட்டாத உக்கிரத்தை முழுவீச்சில் காட்டி இருப்பதால் சமூக வலைதளங்களில் வழக்கமாக 'கமெண்டுகள்' விழுகின்றன.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்பது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து. அதுவும் டெங்கு, மலேரியா, காலரா போல சனாதனத்தை ஒழிப்போம் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதனால் ஒட்டுமொத்த இந்திய சனாதன நம்பிக்கையாளர்களும் கொந்தளித்து போயினர். பிரதமர் மோடியே மத்திய அமைச்சரவையை கூட்டி விவாதிக்கும் அளவுக்கு உச்சமானது.

இதனிடையே திமுகவையே டெங்கு, மலேரியா, காலரான என தமிழ்நாடு பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் எச்.ராஜா உள்ளிட்டோரும் இதனை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், கொசுவர்த்தி சுருள் எரியும் படம் ஒன்றை மட்டும் பதிவிட்டுள்ளார். அதில் எந்த கருத்தும் எழுதப்படவில்லை. இது மிகப் பெரிய புதிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.
இப்படத்துக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள எச்.ராஜா, ஸனாதன தர்மத்தை காப்போம் என்றதால் பாஜக வினர் கைது செய்யப்பட்டுள்ளோம். ஆனால் உதயநிதி சனாதனவாதிகளை மலேரியா, டெங்குஆகிய கொசு மருந்து கொண்டு கொல்லுவோம் என்ற இந்து விரோதி உதயநிதிக்கு சல்யூட் அடிப்பார்கள் என முதலில் பதிவிட்டார்.
அதற்கு அடுத்ததாக அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்யும் ஒரு படத்தை இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டபோது என்ற தலைப்பில் எச்.ராஜா வெளியிட்டார். இதுவரை இல்லாத அப்படி ஒரு கோபம், அப்படி ஒரு உக்கிரத்தை எச்.ராஜா அந்த படத்தில் காட்டியிருக்கிறார். திருச்சி போலீசாரை மிரட்டும் வகையில் அந்த படம் இருப்பதாகவே தெரிகிறது. தமிழக ஊடகங்களில் இப்படி ஒரு உக்கிரமான முகத்தை எச்.ராஜா இதுவரை வெளிப்படுத்தியதில்லை என்பது சமூக வலைதளங்களின் பொதுவான கருத்து.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications