எச்.ராஜா டிவீட்: தீவிர முயற்சி எடுத்தது அரசு.. சுஜீத்தை உயிருடன் மீட்க முடியாதது வருத்தம் அளிக்கிறது
சுஜித் மரணம்: எச். ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "சுஜித்தை காப்பாற்ற அரசு தீவிர முயற்சி மேற் கொண்டும் காப்பாற்ற இயலாதது வருத்தமளிக்கிறது" என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
குழந்தை குழிக்குள் விழுந்ததில் இருந்தே அமைச்சர்கள் நடுக்காட்டுப்பட்டியிலேயே முகாமிட்டனர். கட்சி பாகுபாடு இல்லாமல் பலரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகள் குறித்து விசாரித்து கொண்டே இருந்தனர்.

நேற்று சாயங்காலம் பிரதமர் மோடி சுஜித் மீட்பு விஷயம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். முதல்வரிடம் தொடர்பு கொண்டு, நிலைமை பற்றி விசாரித்தார். இது சம்பந்தமாக ட்விட்டரிலும் தமிழ், ஆங்கிலத்தில் பதிவிட்டு, சுஜித்துக்காக பிரார்த்திப்பதாக கூறியிருந்தார்.
"துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன்.சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் @EPSTamilNadu உடன் விரிவாகப் பேசினேன். சுஜித்தைப் பாதுகாக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று மோடி பதிவிட்டிருந்தார்.
துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன்.சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் @EPSTamilNadu உடன் விரிவாகப் பேசினேன். சுஜித்தைப் பாதுகாக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
— Narendra Modi (@narendramodi) October 28, 2019
இதற்கு பிறகுதான், இந்தட்வீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் எடுத்து போட்டு, "நாங்களும் உங்களுடன் இணைந்து ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கின்றோம்" என்று எச்.ராஜா பதிவிட்டிருந்தார்.
நாங்களும் உங்களுடன் இணைந்து ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கின்றோம் https://t.co/jXb5myfSK7
— H Raja (@HRajaBJP) October 28, 2019
இந்த பதிவிற்கு நிறைய பேர் எச்.ராஜாவிடம், "இத்தனை நாள் ஏன் ஒன்றும் சொல்லவில்லை சார்.மோடி சொன்னால் தான் நீங்க பிரார்த்தனை செய்வீர்களா.ஒரு உயிர் சார்.கருனை நெஞ்சம் தான் வேண்டும்" என்று எச்.ராஜாவை உரிமையுடன் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இத்தனை நாள் ஏன் ஒன்றும் சொல்லவில்லை சார்.மோடி சொன்ன தான் நீங்க பிராத்தனை செய்வீர்களா.ஒரு உயிர் சார்.கருனை நெஞ்சம் தான் வேண்டும்.
— கார்த்திகேயன். (@karthikeyan1958) October 28, 2019
இப்போது சுஜித் சடலமாக மீட்கப்பட்டு விட்டான். இதையடுத்து, எச்.ராஜா குழந்தையின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "சிறுவன் சுஜித்தை காப்பாற்ற அரசு தீவிர முயற்சி மேற் கொண்டும் காப்பாற்ற இயலாதது வருத்தமளிக்கிறது. சுஜித்தின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications