ஹரிஹர சர்மா எழுதிய தமிழ் - சமஸ்கிருத அகராதி.. அண்ணாமலைக்கு பிறந்தநாளன்று வழங்கிய எச்.ராஜா
சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழ் - சமஸ்கிருத அகராதியை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை ஒட்டி அவருக்கு சமூக வலைதளங்களிலும் நேரிலும் பாஜக தலைவர்கள் தொண்டர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வரிசையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்பு சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவரது சமூக பணி சிறக்க வாழ்த்துகிறேன்." என குறிப்பிட்டு உள்ளார்.
அந்த வரிசையில் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா அண்ணாமலையை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அப்போது எஸ்.ஹரிஹர சர்மா எழுதிய தமிழ் சமஸ்கிருத அகராதியை அண்ணாமலையிடம் அவர் வழங்கினார்.
இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள எச்.ராஜா, "தமிழக பாஜக தலைவர் சகோதரர் திரு.அண்ணாமலை Ex.IPS அவர்களின் பிறந்த நாளில் நீண்ட ஆயுளோடும் ஆரோக்யத்தோடும் தேசப்பணியோடு எதிரிகளையும் துவம்சம் செய்ய வாழ்த்துகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications