நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை.. ஏன் இந்த இசைவாணியை கைது செய்யவில்லை? பாஜக எச்.ராஜா கேள்வி!
சென்னை: ஐயப்பனை பற்றி கேலியும், கிண்டலுமாக இசைவாணி, இயக்குநர் ரஞ்சித் போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனவும், கஸ்தூரியை பிடிக்க மட்டும் 2 தனிப்படையை காவல்துறை அமைத்த நிலையில், இசைவாணியை கைது பண்ண ஏன் நடவடிக்கை இல்லை? என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பயிலரங்கம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தேசிய, மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," சமூக வலைதளங்களில் ஹிந்து விரோத பதிவுகள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்க விசயமாகும். அதுவும் கார்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து சபரிமலைக்கு மாலை அணிவித்து பக்தர்கள் சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஐயப்பனை பற்றி கேலியும், கிண்டலுமாக இசைவாணி, இயக்குநர் ரஞ்சித் போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக மோசமான சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. பலபேர் என்னிடம் ஐயப்பனை பற்றி பேசினால், நான் ஏசுவை பற்றி பேசுவேன் என்கிறார்கள். நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை போட்டு பிடித்தவர்கள் தானே இவர்கள், அப்ப ஏன் இந்த இசை வாணியை கைது செய்யவில்லை, காவல் துறையே ஹிந்து விரோதமாக இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது.
அரசாங்கம் இந்து விரோதம் என்பது நமக்கு தெரியும். மாநிலத்தின் துணை முதலமைச்சர் சனாதான ஹிந்து மதத்தை டெங்கு கொசு போல், மலேரியா கொசு போல் அழிக்க வேண்டும் என பேசி இருக்கிறார். நாளைக்கு மற்ற மதங்களை பற்றி பாட்டு போடுவது, டான்ஸ் ஆடும் சூழ்நிலை வந்தால், தமிழ்நாட்டில் மத மோதல்கள் தான் வரும். காவல் துறை உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இதுவரை மஹாராஷ்டிராவில் 200 தொகுதிகளுக்கு மேல் எந்த கட்சியும் வெற்றி பெற்றது இல்லை. ஆனால், இன்று 288க்கு 233 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மஹாராஷ்டிராவில் வெற்றி கிடைத்து இருக்கிறது.
வங்க தேசத்தில் அரசாங்கம் மின்சாரத்திற்கு காசு கொடுக்கவில்லை, அதனால், இவர்கள் மின்சாரத்திற்கான பில்லை கொடுக்கவில்லை என அமெரிக்கா நிர்பந்தப்படுத்தியும், அதானி தயாராக இல்லை, நீங்க பயன்படுத்திய மின்சாரத்திற்கு பணம் கேட்டார். கொடுக்காததால் வங்கதேசத்திற்கு மின்சாரத்தை நிறுத்தியதால், இது போன்ற ரிப்போர்ட் வந்துள்ளது. அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
4 மாநிலங்களில் அதானி இந்த சூரிய மின்சாரத்தை ஒப்பந்தம் வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்தார் என்பது புகார். இதில் தமிழ்நாடு முதலிடம், அடுத்து ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா இதில் பிஜேபி மாநிலம் இருக்கா, இல்லை. இதில் கைது நடவடிக்கைகள் எடுத்தால் தமிழக முதலமைச்சரை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசோ அல்லது ஊடக நண்பர்களோ கேட்கிறீர்களா என்பது எனக்கு தெரியவில்லை. தமிழகமும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட மாநிலங்களில் பாஜக மாநிலங்கள் இல்லை, அதனால் பாஜகவிற்கு எந்த பங்களிப்பும் இல்லை. அமெரிக்க கோர்ட் என்ன சொல்லுதோ அதற்கு கட்டுப்பட்டவர் அதானி, பிஜேபியை சம்மந்தப்படுத்தி, பிரதமர் வாயை திறக்கவில்லை என்பது தேவையற்றது." என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications