“மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர்.. பெண்கள் பாதுகாவலரா?”.. எச்.ராஜா போட்ட ட்வீட்.. பொங்கிய தவெகவினர்!
சென்னை: "மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே நபர் குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வதா?" என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். எச்.ராஜா, தவெக தலைவர் விஜய்யை விமர்சிப்பதாக சமூக வலைதளத்தில் கருத்துகள் எழுந்துள்ளன.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பெற்றோர், உற்றார், உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பின்னாளில் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டு... அதே நபர் பொது மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதும்...

மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே நபர் குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து கூறி தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வதும்... தமிழக அரசியலில் பார்க்க முடிந்த வியப்பான நகைப்பு..!!" எனப் பதிவிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய், திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் இருந்ததாக கூறி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளார். சமீபகாலமாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் தென்படாததால் சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. இந்நிலையில், திருமணத்தை மீறிய உறவில் இருப்பதால் நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.
இதுதொடர்பாக விஜய் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் கூட தற்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் இன்று மாலை மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பெண்களுக்கான சிறப்பு வாக்குறுதிகளை விஜய் வெளியிட்டார்.
முன்னதாக, விஜய் தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளார்' என்ற குற்றச்சாட்டை வைத்து, கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார் சங்கீதா. ஏற்கனவே விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டன் குடியுரிமையுடன் நான் லண்டனில் வசிப்பதால் தமிழ்நாட்டில், சென்னையில் தங்குவதற்கு வீடு இல்லை. இதை விஜய் அறிந்திருந்தும் தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார். விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டுக்குள் நான் வசிக்க அனுமதிக்குமாறு விஜய்க்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சங்கீதா கோரியுள்ளார்.
ஏற்கனவே தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கின் மூலம் விஜய்யிடம் நியாயமான ஜீவனாம்சம் கோரியுள்ளேன். பலமுறை முயற்சி செய்தும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல விஜய் ஒத்துக்கொள்ள மறுக்கிறார். திரைப்படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும் குழந்தைகளுக்கும் வேண்டியதை நியாயமாக வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார் சங்கீதா.
இந்தச் சூழலில் தவெகவின் மகளிர் தின விழா குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். "மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர் குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து கூறி தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வதும் வியப்பான விஷயம்" என விமர்சித்துள்ளார். எச்.ராஜாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவுக்கு தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பதில் கொடுத்து வருகின்றனர்.
-
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி!












Click it and Unblock the Notifications