சேகர் பாபு கிறிஸ்துவர்.. “அல்லேலூயா” சொன்னவர் அறநிலையத்துறை அமைச்சரா? வரிந்துகட்டி வந்த எச்.ராஜா
சென்னை: சென்னையில் நடைபெற்ற திமுகவின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பேசிய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கிறிஸ்தவ மக்கள் எழுப்பும் அல்லேலூயா என்ற முழக்கத்தை மூன்று முறை எழுப்பியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சேகர் பாபுவை கிறிஸ்தவர் என்றும், அவர் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் திமுக சார்பில் 2022 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன் சட்டமன்ற உறுப்பினர், பாதிரியார்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "2021 தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஓரம்கட்டப்பட்டவர்கள் யாரும் இல்லை, எல்லோரும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்ற முன்னோடி மாநிலமாக திராவிட மாடல் ஆட்சியாக இது உள்ளது.

ஓரம்கட்டப்பட்டவர்கள் இல்லை.
அபயக் குரல் எங்கெல்லாம் கேட்கின்றதோ அங்கெல்லாம் ஆதரவு கரம் நீட்டுகின்ற அருட் தந்தையாக முதலமைச்சர் உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நோக்கி நீ ஒரு அடி நடந்தால் நூறு அடி ஓடோடி வந்து உன்னை ஆரத் தழுவுவேன் என்று சொல்வார்கள். தன்னை நோக்கி யாரெல்லாம் ஓரு அடி வருகிறார்களோ அவர்களை நோக்கி நூறு அடி பாயக் கூடிய ஆற்றல் வாய்ந்த முதலமைச்சர் இருக்கும்போது இந்த நாட்டில் ஓரம்கட்டப்படுபவர்கள் யாருமே இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்.

உதயநிதி வந்தாலே மக்களுக்கு வசந்தம்
வெளியில் ஒரு சில தலைவர்கள் வருவார்கள். நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். அந்த நிகழ்வுகளால் தங்களுக்கு என்ன பயன் என கூர்ந்து கவனித்துதான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். ஆனால் இளைய தலைவராக இருக்கும் அருமை அண்ணன் உதயநிதி வெளியில் வந்தாலே மக்களுக்கு வசந்தம் என்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன.

உதயநிதி வழியில்
இன்று அவர் ஏற்று இருக்கும் துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன். அரசியல் என்ற கள விளையாட்டிலே இனி அவர் ஆடுகின்ற ஆட்டங்கள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிகளை குவிக்கும். அவர் வழிநின்று காட்டும் பாதையிலே, தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டு விரல் காட்டும் திசை நோக்கி பாயும் கூட்டம் என்றும் அவருக்கு பின்னால் நிற்கும்.

அல்லேலூயா
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இருக்கும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! நன்றி வணக்கம்." என்று கிறிஸ்தவ மத முழக்கங்களை எழுப்பி பேச்சை நிறைவு செய்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அல்லேலூயா என்று முழங்கிய வீடியோவை அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

எச்.ராஜா ட்வீட்
இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, "அறநிலையத்துறை சட்டம் ஷரத்து 10 ன் படி இந்து அல்லாதவர் அத்துறையின் அதிகாரியாகவோ சிப்பந்தியாகவோ இருக்க முடியாது. ஒரு கிறித்தவர் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருக்க முடியும். ஜெய்ஸ்ரீராம் சொல்லிவிட்டு ஒருவர் வக்ஃப் வாரிய தலைவராக தொடரமுடியுமா? மிஸ்டர் பி.கே.சேகர் பாபு தயவு செய்து வெளியேறுங்கள்." என்று பதிவிட்டு உள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications