இதுக்கும் திமுகதானா.. "தூண்டி விடாமல் சரக்கு மிடுக்கு பேச வாய்ப்பில்லை".. எச். ராஜா சொல்கிறார்!
திருமாவளவனை கைது செய் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்
சென்னை: "சரக்கு மிடுக்கு பேச்சு புகழ் திருமாவளவன், இந்த பெண்கள் விபச்சாரிகள் என்று பொய் பரப்பியுள்ள காலம் நவராத்திரி காலமாகும்... இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத திமுக தூண்டிவிடாமல் இது நிகழ்ந்திருக்க வாய்பில்லை... இந்து விரோத திமுக வை தோற்கடிப்போம்" என்று எச்.ராஜா திமுகவை வம்புக்கிழுத்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
"மனுதர்மம் இந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள்" என்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.

பெண்களை விபச்சாரிகளாக மனுதர்மம் சித்தரிக்கிறது, அதை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டத்திலும் விசிக குதித்துள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் திருமாவுக்கு ஆதரவு கரங்கள் தொடர்ந்து நீட்டப்பட்டும் வருகின்றன.
கடந்த 2 தினங்களாக திருமாவளவனின் இந்த பேச்சுதான் கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.. ஆனால், இந்து பெண்களை திருமாவளவன் விபச்சாரிகள் என பேசிவிட்டதாக இந்து மத ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்...குறிப்பாக பாஜக கொந்தளித்துவிட்டது.
இப்படி பேசியதற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு தெரிவித்திருந்தார்.. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட பலரும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றும் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வழக்கமாக திருமாவளவன் என்றாலே சற்று சூடாகும், எச்.ராஜா இந்த விஷயத்திலும் சற்று ஆவேசமாக கண்டனங்களை வெளிப்படுத்தி வருகிறார்.. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தனது சரக்கு மிடுக்கு பேச்சால் அனைத்து சமுதாய பெண்களை காமத்திற்கு அலைபவர்கள் என்றும் ஆண்கள் ஆண்மை அற்றவர்கள் என்று பேசிய தீயசக்தி திருமாவளவன் இன்று இந்து தர்மத்தில் பெண்களை விபச்சாரிகள் என்று கூறியுள்ளதாக பொய் பரப்பியுள்ளார்.இந்த சமூக விரோதியை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுடன் எச்.ராஜா விடவில்லை.. அடுத்ததாக இன்னொரு பதிவையும் போட்டார்.. அதில், "சரக்கு மிடுக்கு பேச்சுப் புகழ் திருமாவளவன் இன்று ஸனாதன தர்மத்தில் பெண்கள் விபச்சாரிகள் என்று கூறியுள்ளதாக பொய் பரப்பியுள்ள காலம் நவராத்திரி காலமாகும். இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாத திமுக தூண்டிவிடாமல் இது நிகழ்ந்திருக்க வாய்பில்லை. இந்து விரோத திமுக வை தோற்கடிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

திமுக சொல்லாமல் இப்படி, திருமா செய்திருக்க வாய்ப்பில்லை என்று நேரடியாகவே திமுகவையும் உள்ளே இழுத்து விட்டுள்ளது பெரும் சலசலப்பை அரசியல் ரீதியாக ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாஜகவினர் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும், ஒருசிலரோ, "முதல்ல நோட்டாவை ஜெயிக்கிற வழியை பாருங்க.. தேர்தல் நெருங்கிடுச்சு, அங்கே டிரம்ப் நம்ம நாட்டு மானத்தை வாங்கிட்டு இருக்கார், அதை போய் கேளுங்க" என்றும் எச்.ராஜாவுக்கு பதிலடிகளை தந்து வருகிறார்கள்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்?












Click it and Unblock the Notifications