பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண்.. இவங்க கதையை அவர் முடிச்சிடுவார்.. எச்.ராஜா அட்டாக்

திமுகவை சரமாரி விமர்சித்து எச்.ராஜா பேசியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கொலை செய்யும் வன்முறை அரசியலுக்கு ஆதரவாக சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்தும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகளை அடையாளம் காண்போம்" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். "பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண் அடைந்துள்ளது" என்றும் இன்னொரு பேச்சில் காட்டமாக கூறியுள்ளார்.

Recommended Video

    பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண் - எச்.ராஜா

    சமீப காலமாகவே எச்.ராஜா செம பிஸியாக இருக்கிறார்.. உடனுக்குடன் கருத்துக்கள், பேட்டிகள், ட்வீட்கள் என பரபரப்பாகவே இயங்கி வருகிறார்.

    ஆனாலும் திமுகவை மட்டும் கெட்டியாக பிடித்து கொண்டு கடுமையாக தாக்கி பேசிவருகிறார்.. இதற்கு பிறகுதான் பா.சிதம்பரம், சீமான், ஜெயினுலாபிதீன், டேவிட் மணியரன் போன்றோர்களை விமர்சிப்பார்கள்.

    திமுக

    அந்த வகையில் இன்று அவரது ட்வீட்களை பார்த்தோமானால் திமுகவை பற்றிதான் பிரதானமாக தென்படுகிறது.. "முதலில் தலைமைக் காவலர் ரத்தன் லாலைக் கொன்ற வன்முறைக் கும்பல் .. 26 வயது ஐபி அதிகாரி அங்கிட் சர்மாவை கொலை செய்துள்ளனர். இந்த கொலைகளை கண்டிக்காத சோனியா, யச்சூரி, ஒவைசி கூட்டம் அரசையும், காவல்துறையையும் தாக்குவது அப்பட்டமான அரசியல் பதவி வெறி. இவர்களை தோலுரித்துக் காட்டுவது நம் கடமை" என்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    வண்ணாரப்பேட்டை

    "இம்மாதிரி கொலை செய்யும் வன்முறை அரசியலுக்கு ஆதரவாக சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்தும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகளை அடையாளம் காண்போம்" என்று இன்னொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. "வண்ணாரப்பேட்டை தொடர்பாக வதந்தி பரப்பிய செந்தில் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை" என்று மற்றொரு ட்வீட்டில் கேள்வி எழுப்பி உள்ளார்.

    முக ஸ்டாலின்

    ட்வீட்களை தவிர பொதுக்கூட்டங்களிலும் திமுகவை சாடி பேசியுள்ளார்.. போளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசும்போது, திமுக இந்து விரோத கட்சி அல்ல என்று ஸ்டாலின் பேசிட்டு வர்றார். சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்டாலின் பால்குடம் எடுக்கும் வரை திமுக இந்து விரோத கட்சிதான் என்பதை நான் மாத்திக்கவே மாட்டேன்.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் போடும்படி தமிழக அரசை, ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அப்படி மட்டும் செய்தால் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாகி.. இந்த கட்சியே கலைக்கப்படும்... இதைத்தான் ஸ்டாலின் விரும்புகிறார். முஸ்லிம்களை திமுக வெறும் ஓட்டுவங்கியாகத்தான் பார்க்கிறது.. ஆனால் பாஜக அப்படி இல்லை. அவங்களை இந்திய குடிமக்களாக பார்க்கிறது.

    நிர்வாகம்

    நிர்வாகம்

    இந்தியாவில் உள்ள மசூதி, மாதாகோவில் நிர்வாகம் எல்லாமே அவங்ககிட்டேயாதான் இருக்கு.. ஏனென்றால் அந்த அதிகாரத்தை இந்திய அரசு வழங்கியுள்ளது... ஆனால் இந்து கோவில்களின் நிர்வாகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கு.. பிராமணர் எதிர்ப்பு கொள்கை கொண்ட திமுக, இப்போது பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம்தான் சரண் அடைந்திருக்கு... இவங்க கதையை அவர் முடிச்சி வெச்சிடுவார்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+