காஷ்மீர் டூ குமரி வரை இந்துக்கள்தான்.. காலையிலேயே டிவீட் போட்ட எச்.ராஜா.. குவியும் அதகள கமெண்ட்டுகள்

இந்துக்கள் குறித்து எச்.ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னாச்சுன்னு தெரியல.. காலையிலேயே ஒரு ட்வீட்டை போட்டு.. ட்விட்டர்வாசிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா!

பொதுவாக, அனைத்து அரசியல் விஷயங்களையும் கூர்ந்து கவனித்து வருபவர் எச்.ராஜா.. அதற்கான கேள்விகள், பதில்கள், விமர்சனங்கள், கருத்துக்களை எழுப்பி வருபவர்.

ஆனால், டெல்லியில் மிகப்பெரும்பான்மை வெற்றியை பிடித்த ஆம் ஆத்மி குறித்தும், பாஜகவின் தோல்வி குறித்தும், பெரிதாக எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஆனால் ப.சிதம்பரம் டெல்லி வெற்றியை பற்றி கருத்து சொன்னதற்கு, "ஆம் ஆத்மி கட்சி வெற்றி குறித்து ப.சிதம்பரம் பெருமிதம். ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனமாம்" என்று எச்.ராஜா பதிலடி தந்திருந்தார்.

மொழி வெறி

மொழி வெறி

இப்போது, இன்று காலை இந்துக்கள் தொடர்பான விஷயத்தை தனது ட்வீட்டில் பதிவிட்டிருக்கிறார் எச்.ராஜா.. அதில், "காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்துக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஹிந்துக்கள் பெரும்பான்மை தேசமிது அதைப் பராமரிக்க வேண்டும். ஆனால் அதை அழிப்பதற்காக தீய சக்திகள் மொழி வெறியை தூண்டி மதத்திலே வந்து பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ரியாக்‌ஷன்கள்

இன்று எதற்காக, இந்த ட்வீட், அவசிய காரணம் என்ன என்று தெரியவில்லை.. ஆனால் எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு ஏகப்பட்ட பதிலடிகள் வந்து கொண்டிருக்கின்றன.. நிறைய நெட்டிசன்கள் இந்த ட்வீட்டை விமர்சிக்காமல், பதில் கேள்வியை எழுப்பி உள்ளனர்.. ட்வீட்டைவிட, ட்விட்டர்வாசிகளின் ரியாக்‌ஷன்தான் படு வைரலாகி வருகின்றன. அவைகளில் இருந்து சில:

அரசியல்

அரசியல்

"யாரு சார் ஹிந்து 3% இருக்க நீங்களா.. இல்ல 97% இருக்கின்ற எங்கள் தொப்புள் கொடி உறவுகளான என் சகோதரர்களா... நாங்கள் அனைவரும் இங்கே ஒற்றுமையாக தான் உள்ளோம் உங்கள் அரசியலை வட நாட்டு மக்களிடம் செய்யுங்கள்" என்கிறார் ஒருவர்

மேலாதிக்கம்

மேலாதிக்கம்

"நாங்கள் கிந்து இல்லை, தமிழ்த்தேசிய இனப் பெரும்பான்மையினர். கன்னியாகுமரியிலிருந்து, கும்மிடிப்பூண்டி வரை பரந்து வாழும் தமிழர் எனும் தேசிய இனம் பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வருவோராவார். எம்மைக் கிந்து, கிறித்து, இசுலாம் என்று கூறி, அயலான் மேலாதிக்கத்தை வளரவிட இனி விடப்போவதில்லை" என்கிறார் மற்றொருவர்.

எந்த மொழி?

எந்த மொழி?

இந்தியர்களாக தெரியாமல் இந்துக்களாக தெரிகையிலேயே உமது நாட்டுப்பற்று பல்லிளித்து மதவெறி வெளித்தெரிகின்றது.இந்தியாவின் மாநிலங்கள் எந்தஅடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கின்றனவோ? மொழிஅடிப்படையிலா?மத அடிப்படையிலா?இந்துக்களின் மொழி சமஸ்கிருதமா? நீவீர் பேசிக்கொண்டிருப்பது எந்த மொழியிலோ?

காரசார கேள்விகள்

காரசார கேள்விகள்

"உங்களை மாதிரி ஆளுங்க தான் மதத்தை பற்றி பேசிட்டு இருக்கீங்க, இந்துக்கள் நாங்க சரியான பாதையிலே தான் இருக்கோம். அதுவும் திராவிட தமிழனா தலை நிமிர்ந்து வாழ்ந்துட்டு இருக்கோம்" என்கிறார் இன்னொருவர். இதை தவிர சிலர் சந்தேகங்களையும் எச்.ராஜாவிடம் எழுப்பி உள்ளனர்.. "ஈழத்தில் இந்துக்கள் அழிக்கப்படுகிறார்களே? நீங்கள் நினைத்தால் தடுத்து நிறுத்த முடியாதா?", "ஒரு சூத்திர இந்துக்கு உன் வீட்டு பொண்ணை கொடுப்பிங்களா" என்று காரசார கேள்விகளுடன் கமெண்ட்கள் விழுந்து கொண்டிருக்கின்றன!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+