கெஜ்ரிவால் கருத்துக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவா? வெட்கக்கேடு.. எச்.ராஜா ட்வீட்
பிரகாஷ் ராஜுக்கு எச்.ராஜா கடும் கண்டனம்.. ட்வீட் பதிவு
சென்னை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பது வெட்கக்கேடு என்று எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது "தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள். அதனால் அவர்கள் எளிதாக கட் ஆப் பெற்று டெல்லி பல்கலைக்கழகம் வருகிறார்கள்.

ஆனால் டெல்லியில் மாநில பாடத்திட்டம் இல்லை. இதனால் சிபிஎஸ்இ மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை, டெல்லி பல்கலையில் சேர முடிவதும் இல்லை. டெல்லியில் இருக்கும் கல்லூரிகள் மத்திய அரசால் இயக்கப்படுகிறது" என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.
டில்லி ஒரு mini இந்தியா. பாரத தேசத்தவர் அனைவருக்கும் அது சொந்தம். தமிழ் மாணவர்கள் டில்லி மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிப்பதாக கெஜ்ரிவால் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக ரசிகர்களின் ஆதரவால் வளர்ந்த பிரகாஷ்ராஜ் கெஜ்ரிவால் கருத்துக்கு ஆதரவளித்துள்ளது வெட்கக்கேடு.
— Chowkidar H Raja (@HRajaBJP) May 5, 2019
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் நடிகர் பிரகாஷ்ராஜ், அவரது கருத்தை ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அவருக்காக தேர்தல் பிரசாரமும் செய்தார். கெஜ்ரிவால் கருத்துக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு அளித்துள்ளதற்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமான ட்வீட்டில், "டில்லி ஒரு mini இந்தியா. பாரத தேசத்தவர் அனைவருக்கும் அது சொந்தம். தமிழ் மாணவர்கள் டில்லி மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிப்பதாக கெஜ்ரிவால் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக ரசிகர்களின் ஆதரவால் வளர்ந்த பிரகாஷ்ராஜ் கெஜ்ரிவால் கருத்துக்கு ஆதரவளித்துள்ளது வெட்கக்கேடு" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications