Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி இளைஞர் உயிரிழப்புக்கு காரணம் கொரோனா இல்லையா? H3N2 வைரஸ் தான் காரணமா? வெளியான பரபர தகவல்!

திருச்சியில் கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு H3N2 வைரஸ் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 27 வயது இளைஞர் கடந்த 11 ஆம் தேதி உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இளைஞர் மரணத்திற்கு H3N2 காரணமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும் பரிசோதனை முடிவுகளுக்கு பிறகு இதை உறுதி செய்ய முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகரங்களில் அதிக அளவில் காய்ச்சலால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு திருச்சி நபர் பலி

கொரோனாவுக்கு திருச்சி நபர் பலி

கடந்த 10 ஆம் தேதி தமிழகம் முழுக்க ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இது ஒருபக்கம் இருக்க கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன் தினம் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியது. திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த 27-வயது இளைஞர் ஒருவர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்ட பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே, அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதால், அவர் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அவர் உயிரிழந்தது தமிழத்தில் மீண்டும் கொரோனா குறித்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இளைஞர் பலியானது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவா சென்று வந்திருக்கிறார்

கோவா சென்று வந்திருக்கிறார்

திருச்சியை சேர்ந்தவர் 27-வயது மதிக்க தக்கவர். பெங்களூரில் வசித்துக் கொண்டிருந்தவர். பெங்களூரில் வசித்து வந்த அவர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி கோவாவிற்கு சென்று வந்து இருக்கிறார். அவருக்கு உடல் நிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டதும் சொந்த ஊரான திருச்சிக்கு வந்து இருக்கிறார். திருச்சியில் ஜிவிஆர் என்று சொல்லப்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொரோனா பாசிட்டிவ் இருந்தது

கொரோனா பாசிட்டிவ் இருந்தது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போதே அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மோசமான உடல் நிலையுடன் தான் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்று மருத்துவமனையின் இறப்பு அறிக்கையில் உள்ளது. அவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்திருக்கிறது. கொரோனா பாதிப்பா அல்லது எச்3 என் 2 பாதிப்பா என்பது உறுதி செய்யப்படாத ஒன்றாக உள்ளது. அவருடைய மாதிரிகளை தற்போது ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கிறோம். ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மிக விரைவில் அறிவிப்போம்

மிக விரைவில் அறிவிப்போம்

ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மிக விரைவில் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த உடன் மரணம் எப்படி நேர்ந்தது என்பதை உங்களிடம் தெரிவிப்போம். அவர் வரும் போதே கொரோனா பாசிட்டிவ் இருந்துள்ளது. வரும் போதே மோசமான பாதிப்புடன் வந்திருப்பதாக மருத்துவமனை கூறியிருக்கிறது. வேறு ஏதேனும் இணை நோய் பாதிப்பு இருந்துள்ளதா என்பதை கண்டறிந்து மிக விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+