இன்ஷா அல்லாஹ்.. 2026 ஹஜ் பயணம்! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த தேதியை மட்டும் மறக்காதீங்க
சென்னை: 2026ஆம் ஆண்டு இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய பெருமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள், ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். தமிழகத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.
ஆன்லைன் மூலம் அவர்கள் விண்ணப்பிப்பதன் மூலம் பயண ஏற்பாடுகள் மற்றும் நிதி உதவி ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," ஹஜ் 2026-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழுவானது ஹஜ் விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது என்பதை தமிழ் நாடு மாநில ஹஜ் குழு அறிவிக்க விரும்புகிறது. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2026-ற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 07.07.2025 முதல் 31.07.2025 (இரவு 11.59 வரை) முடிய ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது https//hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு கைபேசியில் "HAJ SUVIDHA" செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
ஹஜ் 2026-ல் விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமர்ப்பிக்கலாம். இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளைநிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கடந்த ஆண்டைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம்.
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் 31-12-2026 வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத் தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். ஹஜ் 2026-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி https://hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். 2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான "நுசுக் மசார்" போர்ட்டலின்படி பாஸ்கோர்ட்டுக்காக புதிதாக விண்ணப்பிப்பவர்கள் குடும்ப பெயர்/கடைசி பெயர் ஆகியவற்றை காலியாக விடாமல் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது.
மேலும், ஹஜ் 2026-ல் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் புனிதப் பயணிகள் நபர் ஒருவருக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.1.50 இலட்சத்தை செலுத்த தயார் நிலையில் இருப்பதுடன் தங்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட் உள்ளதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.7.2025 ஆகும். மேலும் ஹஜ் பயணிகள் மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு காரணத்திற்காக பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதனால் விண்ணப்பதாரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படக்கூடும். எனவே ஹாஜிகள் தங்கள் தயார்நிலை மற்றும் ஹஜ் பயணத்தை உறுதிப்பாட்டை கவனமாக அறிவுறுத்தப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications