ஹஜ் பயணிகள் கவனத்திற்கு.. ஏஜென்ட்களிடம் பணம் எதுவும் கட்டாதீர்.. ஹஜ் கமிட்டி தலைவர் அறிவுறுத்தல்..!
சென்னை: தற்போதைய சூழலில் ஹஜ் பயணிகள் ஏஜென்ட்களை நம்பி பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக 2021-ம் ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்து சவுதி அரசு இதுவரை தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

2021-ம் ஆண்டு ஹஜ்
கொரோனா பரவல் காரணமாக 2021-ம் ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்து தீர்க்கமான முடிவை சவுதி அரசு இதுவரை எடுக்கவில்லை.இந்திய அரசும் சவுதி அரசும் இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிடவில்லை. எனவே எவ்வளவு கோட்டா ஒதுக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

வதந்திகள்
இந்தியாவிலிருந்து சவுதிக்கு விமான போக்குவரத்தும் இதுவரை தொடங்கப்படவில்லை. சவுதி அரசு 2021 ஆண்டு ஹஜ் ஒதுக்கீட்டில் 20 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு ஒதுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்தி உலா வருகிறது. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இதனிடையே மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி குறைந்தது 50 ஆயிரம் பேருக்காவது ஹஜ் பயண ஒதுக்கீடு கேட்டு சவுதி அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.

பணம் கட்டாதீர்
இதற்கும் அங்கிருந்து எந்த ஒப்புதலும் வரவில்லை. அதனால் 2021 ஹஜ் செல்ல ஜனவரி 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம், அதற்கு 300 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்,வேறு எந்த முன்பணமும் அரசாங்கம் சொல்லும் வரை யாரும் கட்ட தேவையில்லை. தனியார் ஏஜென்ட்கள் நம்பி பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்.

சவுதி அரசு
பயணிகள் அனைவரும் காத்திருந்து இந்திய அரசும் சவுதி அரசும் என்ன முடிவெடுக்கிறது என்பதை தெளிவாக தெரிந்த பின்னர் பணம் கட்டினால் போதும்.இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் பயணிகளை வெளிப்படையாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் முறை கொண்டு வரப்படும் என்று ஏற்கனவே சவுதி அரசு அறிவித்துள்ளது. இதை மனதில் கொண்டு ஹஜ் மற்றும் உம்ரா பயணிகள் செயல்பட வேண்டுமென்று இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications