தாசில்தாரிடம் அரை கிலோ தங்கம்.. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், வங்கியில் ரொக்கம்? திகைத்து நிற்குது ஒடிசா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அங்கிருந்து விலகவில்லை.. ஜிதேந்திர குமார் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தார்? என்ற ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.. மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்து விவரங்களை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளனர்.. இது தொடர்பான விசாரணையும் அங்கு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஒரிசா ஊழல் தடுப்பு பிரிவு துறையினர், கட்டாக் மாவட்டம் பரங்காவில் முக்கிய அதிரடி ஒன்றை மேற்கொண்டனர்.. அதாவது அங்கு கூடுதல் தாசில்தாராக பொறுப்பு வகித்து வரும் ஜிதேந்திர குமார் பாண்டா மற்றும் கியோஞ்சர் மாவட்டம் பாஞ்சோ ஜிபியில் பஞ்சாயத்து செயல் அதிகாரியாக உள்ள ஜிதேந்திர குமார் ஜேனாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Tahsildar Gold Assets odisha

காரணம் இவர்கள் 2 பேருமே வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக ஒடிசா ஊழல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. இந்த அடிப்படையில் இருவருக்கும் சொந்தமான பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்..

தாசில்தார் தங்கம், நிலம், சொத்து

அப்போது, வணிக வளாகங்கள், வீடுகள், மனைகள் வாங்கி குவித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், 100 கிராம் தங்கம், ரூ.34.06 லட்சம் டெபாசிட் ஆவணங்கள், கார் உள்ளிட்டவையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதில் பாண்டாவிடம் புவனேஸ்வரில் 2 பங்களாக்கள் , குர்டா நகரில் அப்பார்ட்மென்ட், ஏக்கர் கணக்கில் 4 நிலங்கள், இருந்தது. மேலும் ரூ.73.66 லட்சம் ரொக்கம், 560 கிராம் தங்கம், ரூ.36.97 லட்சம் வங்கி வைப்பு, காஸ்ட்லி கார் என மொத்த சொத்துகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..

மலைக்க வைத்த சொத்து

அதேபோல ஜேனாவின் சொத்துகளை பார்த்து அதற்கு மேல் ஆச்சரியப்பட்டனர்.. 3 மாடி கட்டிடம், ரூ.1.34 கோடியே மதிப்பில், 2 மாடி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஏக்கர் கணக்கில் நிலங்கள், 100 கிராம் தங்கம், ரூ.34.06 லட்சம் வங்கி வைப்பு மற்றும் ஒரு காஸ்ட்லி கார் என சொத்துக்கள் நீள்கின்றன.. இதையடுத்து, இவர்கள் இருவர் மீதும் தனித்தனியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

பரங்காவின் கூடுதல் தாசில்தாராக பொறுப்பு வகித்து வருபவர் ஜிதேந்திர குமார் பாண்டா. கியோஞ்சர் மாவட்டம் பாஞ்சோ ஜிபியின் பஞ்சாயத்து செயல் அதிகாரியாக உள்ளவர் ஜிதேந்திர குமார் ஜெனா. இவர்கள் இருவருக்கும் எப்படி இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தன? எப்படி சம்பாதித்தார்கள் என்று ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனராம்.

2 அதிகாரிகளிடம் விசாரணை

தற்போது இருவருக்கும் சொந்தமான பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.. மேலும் 2 அதிகாரிகளையும் கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல மக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு கிளம்பி உள்ளது.. ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்மக எடுக்கப்படும் என்றும் விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+