மாணவர்களே ரெடியா? அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாள் விடுமுறை - திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருத்தப்பட்ட நாட்காட்டியை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை. அதன்படி, டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி புதன்கிழமை வரை 9 நாட்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் 2024-25 கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற காலாண்டு தேர்விற்கான விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பள்ளி வேலை நாட்களில் திருத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து புதிய திருத்தப்பட்ட பள்ளி நாட்காட்டியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரையாண்டு தேர்வு மற்றும் விடுமுறை நாட்கள் விவரம் வெளியாகியுள்ளது. இந்த மாதம், அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை நாட்கள் ஆகும். அக்டோபர் 31 ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி விடுமுறை.
அடுத்த மாதமான நவம்பர் மாதத்தில் பள்ளிகள் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். 30 நாட்களில் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமை சேர்ந்து 9 நாட்கள் வருகிறது. மொத்தம் வேலைநாட்கள் 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பொதுத்தேர்வு அட்டவணை நாளை மறுநாள் வெளியாகிறது!
டிசம்பர் மாதத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. டிசம்பர் 15 ஆம் தேதி வரை, வார விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். டிசம்பர் 16 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை டிசம்பர் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு வரை விடுமுறை இருக்கும். இடையே கிருஸ்துமஸ் விடுமுறையையும் சேர்த்து 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது.
ஜனவரி 2 ஆம் தேதி முதல் மூன்றாம் பருவம் தொடங்கும். 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு (Revision Exam) ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் திருப்புதல் தேர்வு ஜனவரி 29 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் ஆகிய அரசு விடுமுறை நாட்கள் போக மொத்தம் 19 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என நாட்காட்டி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் 11-ம் தேதி தைப்பூசம் அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்கள் போக மொத்தம் 19 நாட்கள் பள்ளிகள் செயல்படும். மார்ச் 3 ஆம் தேதி முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் திருப்புதல் தேர்வு தொடங்கும். மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரமலான் அரசு விடுமுறை நாட்கள் ஆகும்.
நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும். அதனைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை தொடங்கிவிடும். ஆசிரியர்களுக்கான நிர்வாக பணிகள் சேர்ந்து பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் நிறைவடையும். 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வரும் திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications