மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பொதுத்தேர்வு அட்டவணை நாளை மறுநாள் வெளியாகிறது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடப்பு கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ஆம் தேதி அன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளார்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பேரில், அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் வருகின்ற திங்கள்கிழமை (14.10.2024) காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications