நாளை அரையாண்டு தேர்வு: முன்கூட்டியே வெளியான கேள்வித்தாள்... கல்வித்துறை விசாரணை
சென்னை: நாளை (வெள்ளிக்கிழமை) அரையாண்டு தேர்வு தொடங்கும் நிலையில் 9வகுப்பு தமிழ் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானதாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நாளை (டிசம்பர் 13) முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடக்கிறது.

இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு கேள்வித்தாள் தயாரிக்கப்படுவது வழக்கம். அப்படி தயாரிக்கப்படும் கேள்வித்தாள்கள், பள்ளி கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சீலிட்டு அனுப்பி வைக்கப்படும். அவற்றை பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் அளிப்பார்கள்.
இந்நிலையில் நாளை தமிழ்பாடத்தேர்வுகள் நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள 9வகுப்புகளுக்கு தமிழ் தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியான புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான கேள்வித்தாள், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கானது என தகவல் பரவிய நிலையில், அதை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதையடுத்து எந்த மாவட்டத்தில் இருந்து வெளியான கேள்வித்தாள் என்பது குறித்தும், உண்மையிலேயே கல்வித்துறை அச்சடித்த கேள்வித்தாளா அல்லது யாரேனும் வேண்டுமென்றே பரப்பிய தவறான தகவலா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரித்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications