சென்னை பெருங்குடியில் பெண் கொலையில் திடீர் திருப்பம்.. கணவரே கொலை செய்தது அம்பலம்.. பரபர பின்னணி!
Recommended Video

சென்னை: சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கணவரே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை மேட்டில் தினமும் 300-க்கும் அதிகமான லாரிகளின் மூலம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அவ்வாறு கொட்டப்பட்ட குப்பைகளில் கடந்த 21-ஆம் தேதி ஒரு சாக்கு பை திணிக்கப்பட்டு இருந்தது.
அதில் பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை மட்டும் இருந்ததால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் சுமார் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருப்பார் என தெரியவந்தது.

மருத்துவமனையில்
எனினும் அவரது உடல் பாகங்கள் கிடைக்காததால் பள்ளிக்கரணை போலீஸார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. கண்டெடுக்கப்பட்ட ஒரு கை மற்றும் இரண்டு கால்களை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்து 3 மருத்துவ உதவிப் பேராசிரியர்கள் கொண்ட குழு ராமலிங்கம், நரேந்திரன், எழில்கோதை தலைமையில் மரபணு சோதனைக்கு திசுக்களை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

அடையாளம்
இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக கொலையில் போலீஸார் துப்பு துலங்கி வந்தனர். எனினும் கொலையாளியை நெருங்க முடியாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது.

தூத்துக்குடி
அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதை போலீஸார் உறுதி செய்தனர். அவர் சென்னை ஜாபர்கான்பேட்டையில் கணவர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணனுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. இவர் திரைத்துறையை சேர்ந்தவர். காதல் இலவசம் என்ற படத்தை இயக்கியுள்ளாராம்.

விசாரணை
விசாரணையில் மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் இருவருக்கும் அவ்வப்போது குடும்பச் சண்டை ஏற்படும். இதனால் இருவரும் விவாகரத்துக்கு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அது நிலுவையில் உள்ளது.

கணவர் கொலை
இந்த நிலையில் சந்தியாவுக்கு வேறு ஒரு ஆணுடன் கள்ளக்காதல் இருந்ததை அறிந்த பாலகிருஷ்ணன் ஜாபர்கான்பேட்டையில் வைத்தே சந்தியாவை கொலை செய்து விட்டு கை, கால்களை பெருங்குடியில் வீசியதும் தெரியவந்தது. உடலின் மற்ற பாகங்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications