ஈசிஆரில் வருகிறது மாற்றம்.. சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மத்திய அரசே சொல்லிடுச்சே.. அப்படி போடு
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரையில் கப்பல் சுற்றுலா மையமாக அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை பெற்று தந்துவருகிறது.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், எந்திர படகுகள், வேகமான எந்திர படகுகள் உள்ளன.

படகு குழாம்: இதனால் படகு குழாமுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. இதனிடையே, சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் இந்த படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான 2 அடுக்கு மிதக்கும் சொகுசு உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது... இது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல் படுத்தப்பட உள்ளது.. இந்த சொகுசு உணவக கப்பல் தமிழ்நாட்டில் முதல் முறையாக அமைய உள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. பிரமாண்டமான 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சமீபத்தில் முட்டுக்காடு படகு குழாமில் தொடங்கி வைத்திருந்தார்..
கிழக்கு கடற்கரை: இந்நிலையில், சென்னையை கிழக்கு கடற்கரையில், கப்பல் சுற்றுலா மையமாக அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. சென்னை துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, "சென்னை துறைமுகத்தைக் கிழக்கு கடற்கரையைக் கப்பல் சுற்றுலா மையமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். சென்னை துறைமுகம், கோர்டேலியா குரூஸ் நிறுவனத்துடன் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மே 2022-ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
சிறந்த மாநிலம்: கடந்த சில ஆண்டுகளில் 37 கப்பல் சுற்றுலா மையங்களில் இருந்து 87,000 பயணிகள் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளனர். தொழில்துறை வளர்ச்சி மற்றும் உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது. சாகர்மாலாத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 1.4 லட்சம் கோடி ஒதுக்கீடுச் செய்யப்பட்டு 108 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் 41 திட்டங்கள் நிறைவுப் பெற்றுள்ளன. 34 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தள்ளார்.












Click it and Unblock the Notifications