துள்ளுது தமிழ்நாடு.. வரப்போகுது கோடை விடுமுறை.. தென்னக ரயில்வே தந்த ஹேப்பி நியூஸ்.. மக்கள் மகிழ்ச்சி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு அதிரடிகளை செய்துவரும் ரயில்வே நிர்வாகம், தற்போதும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோடை விடுமுறை துவங்க உள்ளதால் சொந்த ஊர்களுக்கு பலரும் செல்ல வேண்டியிருக்கும்.. இதைத்தவிர கோடைவாசஸ்தலங்களுக்கு சென்று குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க நினைப்பார்கள்..

வெயிலிலிருந்து தப்பிக்கவும், விடுமுறையை கொண்டாடவும் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடுவர். நீண்ட தூரப் பயணங்களுக்கு மக்கள் அதிகம் விரும்பக்கூடிய பொதுப்போக்குவரத்து ரயில்களைதான்..
கோடை விடுமுறை: எனவேதான், ஒவ்வொரு கோடைவிடுமுறைகளின்போதும், மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், இந்த வருடமும், கோடை விடுமுறையையொட்டி, 30 சிறப்பு ரயில்கள் 150 சர்வீஸ்களாக இயக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களில், பொதுமக்கள் அதிகளவில் வெளியூர் பயணம் செல்வார்கள் என்பதாலும், சுற்றுலா பயணங்களை திட்டமிடுவார்கள் என்பதாலும், பயணியரின் தேவைக்கு ஏற்றார்போல, சிறப்பு ரயில்கள் இயக்குவதாக ரயில்வே முடிவு செய்துள்ளதாம்.
ரயில்வே பெட்டிகள்: அத்துடன், விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்குவது உட்பட இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை, ரயில்வே மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, பயணியரின் தேவைக்கு ஏற்ப, தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, வேளாங்கண்ணி, சென்னை சென்ட்ரல் - கோவை, திருவனந்தபுரம், -மங்களூரு, கொச்சுவேலி, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு உட்பட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 30 சிறப்பு ரயில்கள் 150 சர்வீஸ்களாக இயக்கப்படுகின்றன. ...
மகிழ்ச்சி: இதற்கான, கால அட்டவணை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் மட்டுமின்றி, வழக்கமான ரயில்களில் காத்திருப்போர் பட்டியலை குறைக்கும் விதமாக, கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்படும்" என்றனர்.
ரயில்வேயின் இந்த அறிவிப்பானது, பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துவருவதுடன், சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கான திட்டமிடுதலையும் தந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications