சோழிங்கநல்லூருக்கு நற்செய்தி.. குஷியில் சிறுசேரி.. ஆபீசர்ஸின் சர்ப்ரைஸ்.. சென்னைக்கு ஹேப்பி நியூஸ்
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தின் அதிரடிகள் துரிதமாகி வரும்நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் பெருகிவரும் நிலையில், இவைகளை சமாளிக்கவும், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை: அந்தவகையில், சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இதில், மாதவரம் - சோழிங்கநல்லூர் ( 5-வது வழித் தடம் ), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி ( 4-வது வழித் தடம் ) இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப்பாதைகள் வரப்போகின்றன.
ராட்சத இயந்திரங்கள்: எனவே, 3.75 கி.மீ. தொலைவுக்கு இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றன.. லாஞ்சிங் கிர்டர் வகையை சேர்ந்த ராட்சத இயந்திரங்கள், கிரேன்கள் இதற்காகவே பிரத்யேகமாக களமிறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித் தடத்தில், சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி வரை தடைபட்டிருந்த மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறுசேரி: ஓஎம்ஆர்சாலையில் நேரு நகர் முதல் சிறுசேரி சிப்காட் வரை உயர்மட்டப்பாதை பணிகள் கடந்த வருடம் முதல் ஆரம்பமான நிலையில், சோழிங்கநல்லூர் - சிறுசேரி வரை 10 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்ட பாதைக்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்தன.. பிறகு சாலை தடுப்புகளும் அமைக்கப்பட்டு வந்தன.
சோழிங்கநல்லூர் - சிறுசேரி சிப்காட் இடையே 9 மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம், கடந்த வருடம் வழங்கப்பட்ட நிலையில், பணிகள் ஆரம்பமாயின.
வழித்தடம்: மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில், சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு ரூ.1,134 கோடியே 11 லட்சம் மதிப்பில் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருந்தது.
இந்த ஒப்பந்தம் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி ஆகும். இது சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டத்திற்கான கடைசி உயர்மட்ட வழித்தட ஒப்பந்தமும் ஆகும்..
ஒப்பந்ததாரர்: இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், உயர்மட்ட வழித்தடம் (தோராயமாக 10 கிமீ நீளம்) அமைத்தல் மற்றும் 9 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதுதான்.. இதற்கு பிறகு, இந்த நிறுவனம், கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள துணை ஒப்பந்ததாரரை நியமித்தது. ஆனால், அவர்கள் பணியை தொடங்காததால், திட்டப் பணியில் தாமதம் ஏற்பட்டுவிட்டதாம். தற்போது, விரைவில் இந்த பணிகள் தொடங்க போகிறார்களாம். இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சொல்லும்போது, ஒப்பந்ததாரர் கடந்த வருடம் பணியை தொடங்கினாலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆர்விஎன்எல் நியமித்த ஏஜென்சி அல்லது துணைஒப்பந்ததாரர் அதை செய்யவில்லையாம்..
கட்டுமான பணிகள்: எனவே, ஏஜென்சியின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுவிட்டதாம். தற்போது, பணியை மேற்கொள்ள வேறு ஒரு புதிய நிறுவனத்தை அடையாளம் கண்டுள்ளதால், கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்கிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications