சென்னைக்கு நற்செய்தி.. மாறப்போகிறது ஈசிஆர்... அறிவித்தார் பிடிஆர்.. தமிழக அரசின் அதிரடி..!
கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுகிறது
சென்னை: தமிழக பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈசிஆர் சாலை.. சென்னையின் புகழ்பெற்ற சாலை.. திருவான்மியூரில் இருந்து தொடங்குகிறது இந்த கிழக்கு கடற்கரை சாலை..
சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை சுமார் 135 கி.மீ தூரம் நீள்கிறது.

திருவான்மியூர்
சென்னையில் திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை பல ஐடி கம்பெனிகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்றவை உள்ளன. வார இறுதி நாட்கள் என்றாலே ஈசிஆர் தான் சென்னைவாசிகளுக்கு நினைவுக்கு வரும்.. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் உற்சாகமாக பொழுதை கழிக்க கிழக்கு கடற்கரை சாலைக்கு பல்லாயிரம் பேர் சென்றுவருவார்கள்... இது தவிர மாமல்லபுரத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாவுக்காக ஈசிஆர் சாலையில் தான் வந்து செல்கின்றனர்..

சிதம்பரம்
அதேபோல, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்ல இந்த சாலை தான் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், லட்சக்கணக்கான வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்து வருகின்றன.. இதனால் ஈசிஆர் ரோட்டில் எப்போதுமே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.. எனவேதான் இந்த சாலையை ஆறுவழிச்சாலையாக மாற்ற 2012ல் அரசு முடிவு செய்தது... இதற்காகவே பணிகளை பல இடங்களில் விறுவிறுப்பாகவும் முடித்தது..

போக்குவரத்து மாற்றம்
ஆனால், திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை உள்ள 10.5 கி.மீ தூரம் உள்ள சாலை பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கலை சந்தித்ததால், இதற்காகவே கோர்ட்டுக்கு போனார்கள். இந்த சிக்கலால் ஆறுவழிச்சாலை பணிகள் ஆரம்பிக்கப்படவேயில்லை. நாளுக்கு நாள் வாகன பெருக்கம் ஈசிஆர் சாலையில் அதிகமாகிகொண்டே வருகிறது.. விபத்துகள் பலவும் ஏற்பட்டு வருகின்றன.. எனவே, திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச்சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது..
Recommended Video

மாமல்லபுரம்
எனினும், ஆறுவழிசாலை அமைந்தால் மட்டுமே ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக நம்பப்பட்டது.. அதற்கான அறிவிப்புதான் இன்றைய தினம் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இன்றைய பட்ஜெட் கூட்டத்தில், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில், ஜரூர் பணிகள் ஈசிஆர்சாலையில் நடக்கும் என்றே நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications