பள்ளி மாணவர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்.. இந்த "ஆவணங்கள்" ரெடியா இருக்கா? தமிழக அரசு முக்கிய உத்தரவு
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான அடுத்த அதிரடியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.. இதுகுறித்த ஒரு முக்கிய அறிவிப்பும் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், இலவச பேருந்து வசதியும் அமைத்து தந்துள்ளது..
ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, இந்த இலவச பஸ் வசதி அமைத்து தரப்பட்டுள்ளது.. அதேபோல, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்களையும் வழங்கி வருகிறது.

இந்த இலவச பஸ் பாஸ் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.. அந்தவகையில், இந்த வருடமும் இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி மும்முரமாகி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..
பஸ் பாஸ்கள்: இதைத்தவிர கடந்த வருடம் போலல்லாமல், இந்த வருடம் மாணவர்களின் பஸ் பாஸ், கம்ப்யூட்டரைஸ்டு அதாவது கணினி முறையில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், மாணவர்களின் விவரங்கள் + பஸ் பாஸ் விவரங்கள் அனைத்தும் கணினி மூலமாகவே பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விறுவிறுப்பாக மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களின் விவரங்களை உடனடியாக சேகரிக்குமாறு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் உத்தரவிடப்பட்டிருக்கிறது.. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்களின் விவரங்களை TNSED செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கணிணி மயம்: ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் பஸ் பாஸ் தயாரிக்கப்பட்டு வருவதால், மாணவர்களின் பெயர், பள்ளி, புகைப்படம், எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு செல்கிறார் என்ற விவரம் ஆகியவை அதில் கணிணி முறையில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால், இந்த விவரங்கள் கேட்கப்படுகிறது.. இவைகளை மாணவர்களிடமிருந்து பெற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அறிவுரை: கோடை வெயில் காரணமாக தாமதமாக அதாவது, ஜுன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பஸ் பாஸ் வழங்கப்படாவிட்டாலும் பள்ளி சீருடை அணிந்திருந்தாலே மாணவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications