Happy Birthday bestest.. விஜய்யுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகை திரிஷா
சென்னை: விஜய்க்கு நடிகை திரிஷா பிறந்தநாள் வாழ்த்த்து தெரிவித்துள்ளார். விஜய்யுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து தனது வாழ்த்து செய்தியை திரிஷா பதிவிட்டு இருக்கிறார். இந்த படத்தில் விஜய் நாய்க்குட்டியை கொஞ்சி விளையாடுகிறார். நெட்டிசன்கள் பலரும் இந்த பதிவுகளுக்கு கீழே விஜய்க்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகின் உட்ச நட்சத்திரமாகவும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், சக நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரிஷா
இதனால் இன்று காலையில் இருந்தே சமூக வலைத்தளங்களில் விஜய்யின் பிறந்த நாள் வாழ்த்து குறித்த செய்தி பதிவுகள் வைரலாகி வருகின்றன. எக்ஸ் தளத்திலும் ஹேப்பி பர்த்டே விஜய் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில்தான் விஜய்க்கு நடிகை திரிஷாவும் வாழ்த்த்து தெரிவித்துள்லார்.
Happy Birthday bestest என்று பதிவிட்டு திரிஷா விஜய்க்கு பிறந்தநாள் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து தனது வாழ்த்து செய்தியை திரிஷா பதிவிட்டு இருக்கிறார். இந்த படத்தில் விஜய் நாய்க்குட்டியை கொஞ்சி விளையாடுகிறார். நெட்டிசன்கள் பலரும் இந்த பதிவுகளுக்கு கீழே விஜய்க்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
நீண்ட கால நண்பர்கள்
பலரும் விஜய்யும் திரிஷாவும் நீண்ட காலமாக நண்பர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஆரம்பம் முதல் நடித்த படங்களின் புகைப்படங்களை பதிவிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திரிஷாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கில்லி படத்தின் மூலமாக விஜய்யும் திரிஷாவும் இணைந்து நடித்தனர். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து விஜய்யுடன் திருப்பாச்சி, ஆதி, குருவி படங்களில் திரிஷா நடித்து இருந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் லியோ படத்தில் நடித்தார். தொடர்ந்து விஜய்யின் கோட் படத்திலும் திரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா வாழ்த்து
முன்னதாக நடிகை நயன்தாராவும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். நயன்தாரா தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "அன்புக்குரிய தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு சிறப்பாக அமையட்டும். ஜனநாயகனுக்கு சிறந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டு இருந்தார்.

சஞ்சீவ் வாழ்த்து
அதேபோல விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ், விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். தனது பிள்ளைகளுடன் கேக் வெட்டி விஜய் பிறந்த நாள் கொண்டாடுவது போன்ற புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்த சஞ்சீவ், விஜய்க்கு வாழ்த்து கூறியிருந்தார். விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவரை சந்தித்து வாழ்த்து கூற அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டனர்.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications