Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்ல பாம்பை கழுத்தில் போட்டு டான்ஸ் ஆடினாரே, இப்ப சீரியஸ் அங்கே! யாரும் பார்க்காத ராஜநாகம் இதோ இங்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல பாம்பு கடித்தால் தலை சுற்றல், மயக்கம் வரும்.. நாக்கு செயலிழந்து போகும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். வாயிலிருந்து நுரை போல வெளியே வரும். எனவே கடித்த பாம்பை தேடி நேரம் செலவழிக்காமல், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்பார்கள்.. இந்நிலையில் வடமாநிலத்தில் ஒரு பாம்பு வீடியோ வைரலாகி, இணையத்தில் பலருக்கும் வியப்பை உண்டாக்கி வருகிறது.

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள்.. வேறு எந்த உயிரினத்தைப் பார்த்தாலும் வராத பயம், இந்த பாம்பை பார்த்தால் வந்துவிடும்.. ஊர்வன வகைகளில் படுவேகமும், விஷத்தன்மையும் கொண்ட பாம்புகள் உண்மையிலேயே சாது என்கிறார்கள்.

Nalla pambu cobra

பாம்புகள் எளிதில் பயப்படக்கூடிய தன்மை கொண்டவையாம்.. மனிதர்களைக் கண்டால் அது ஊர்ந்து ஓடத்தான் செய்யுமாம்.. ஆனால் பாம்பு நம்மை கடித்துவிடக்கூடும் என்ற பயத்தில், மனிதர்களும் ஓடுகிறார்கள்... இந்த பயத்தால் பாம்பை அடித்தும் கொன்றுவிடுகிறார்கள்..

நல்ல பாம்பு பாய்சன்

அன்று காட்டுப்புறங்களிலும், ஒதுக்குப்புறங்களில், வயல் வெளிகளிலும் ஊர்ந்துகொண்டிருந்த பாம்புகள் இப்போது குடியிருப்பு பகுதிக்கே வந்துவிடுகின்றன..
நகர விரிவாக்கம் காரணமாக ஊருக்குள் வரும் பாம்புகள் கார்கள், டூ வீலர்கள், ஏசி மெஷின், வாஷிங் மெஷின் என பல இடங்களிலும் புகுந்துவிடுகின்றன.

சமீபத்தில் சென்னைக்கு அருகே AC-யை சுத்தப்படுத்தும்போது நல்லபாம்பு கடித்து ஒருவர் இறந்துபோனது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இப்போது புதுச்சேரியில் ஒரு நல்ல பாம்பு சம்பவம் நடந்துள்ளது.

தலைக்கேறிய மதுபோதை

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள தரியலதிப்பா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கொள்ளப்பள்ளி கொண்டா. 50 வயதான இவர் எந்நேரமும் மதுபோதையிலேயே இருப்பாராம்.. சம்பவத்தன்றும் தலைக்கேறிய போதையில் கொள்ளப்பள்ளி கொண்டா இருந்தபோது, வீட்டுக்கு பக்கத்தில் ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து வந்துள்ளது.. முழு போதையிலிருந்தவர், நல்ல பாம்பை பார்த்ததுமே பாய்ந்து பிடிக்கபோனார்..

பாம்பை கழுத்தில் சுற்றி டான்ஸ்

அப்போது அந்த பாம்பு அவரது கையை கடித்துவிட்டது.. உடனே கொள்ளப்பள்ளி கொண்டாவுக்கு கோபம் வந்துவிட்டது.. பாம்பு மீது ஆத்திரமடைந்த கொள்ளப்பள்ளி கொண்டா, அந்த பாம்பை மீண்டும் பாய்ந்து சென்று லபக்கென்று பிடித்துவிட்டார்..

"உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தால் என்னையே கடிப்பியா?" என்று சொல்லி அந்த நல்ல பாம்பின் கழுத்தை நெரித்தார்.. அப்போதும் பாம்பின் மீதிருந்த ஆவேசம் அடங்காமல், அந்த பாம்பை தன்னுடைய கழுத்தில் மாலையாக சுற்றிக்கொண்டார்.

இதைப்பார்த்து அந்த கிராம மக்கள் அலறினார்கள்.. உடனே கொள்ளப்பள்ளி கொண்டா, கழுத்திலிருந்த பாம்பை, அப்பகுதி மக்கள் மீது தூக்கி வீசுவது போல பயம் காட்டினார்.. இங்குமங்கும் பாம்புடனேயே நடந்து கொண்டிருந்தார்.. பிறகு டான்ஸ் ஆடினார்..

அரசு மருத்துவமனையில் சீரியஸ்

ஆனால் அதற்குள் பாம்பின் விஷம் தலைக்கேறிவிட்டதால் கொள்ளப்பள்ளி கொண்டாவின் வாயிலிருந்து நுரை தள்ளியது.. அடுத்த சிறிது நேரத்தில் பாம்பை கீழே வீசிவிட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அப்பகுதி மக்கள், அவரை மீட்டு காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், தற்போது கொள்ளப்பள்ளி கொண்டாவின் உயிர் ஊசலாடி கொண்டிருக்கிறது.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் உத்தரகாண்ட் மாநிலத்தில் மற்றொரு பாம்பு வீடியோ வெளியாகி அதிர வைத்து வருகிறது.

கிராமத்தில் புகுந்த ராஜநாகம்

டேராடூனின் பௌவாலா (Bhauwala) பகுதியில் உள்ள பத்வாலா (Badowala) கிராமத்தில், செடி கொடிகள் நிறைந்திருந்த பகுதியில் ஏதோ லேசாக அசைவதை போன்று இருந்துள்ளது.. இதனால் அங்கிருந்தவர்கள் உற்றுப்பார்த்துள்ளனர்.. அப்போதுதான் ஒரு பெரிய ராஜநாகம் செடிக்கொடிகளில் மறைந்திருப்பதை கண்டு அலறியடித்து ஓடினார்கள்..

இந்த தகவல் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.. அடுத்த சிறிது நேரத்திலேயே விரைந்து வந்த வனத்துறையினர், இந்த மிகப்பெரிய பாம்பு கட்டுக்குள் கொண்டுவந்தனர்.. ஆனால், அந்த கிராம மக்கள் மட்டுமல்ல, வனத்துறை அதிகாரிகளும் இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவேயில்லை.. காரணம் அந்த ராஜநாகம் 14 அடி நீளம் இருந்துள்ளது.

பயத்தில் வனத்துறையினர்

காரணம், இப்படியொரு பெரிய பாம்பை தங்களது வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்கிறார்கள் வனத்துறையினர்.. உள்ளூர் மீட்பாளரால் கூட மீட்க முடியவில்லை.

அப்போதுதான் பிறகுதான் வனத்துறை ட்ரூப் அதிரடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.. ராஜ நாகம் உலகின் மிகவும் நீளமான மற்றும் மிகவும் விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாகும். அப்படிப்பட்ட பாம்பு, மக்கள் நடமாட்டமுள்ள தெருவிலுள்ள செடிக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லையாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காண்போருக்கு பதைபதைப்பை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+