ரயில் பயணத்தில் குழந்தைகளுக்கு ஹேப்பி! படுக்கை வசதி டிக்கெட்டில் 'டபுள் ஆப்ஷன்' சர்ப்ரைஸ் தெரியுமா
சென்னை: இந்திய ரயில்வே, பயணிகளின் நலனையும், வசதியையும் கருத்தில் கொண்டுதான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.. இதில் சில சலுகைகளையும் வழங்கி உள்ளது.. அந்தவகையில் ரயிலில் பயணம் செய்யும்போது, குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை டிக்கெட் எடுக்க வேண்டும், யார் யாருக்கு சலுகைகள் உண்டு என்பது குறித்து பலருக்கும் குழப்பம் இருக்கலாம்.. சோஷியல் மீடியாவில் பரவும் சில தவறான தகவல்களால் பயணிகள் அவ்வப்போது அபராதம் செலுத்தும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.. அதனால்தான் ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ விதிகளை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம்.
இந்திய ரயில்வேயின் தற்போதைய விதிமுறைகளின்படி, உங்கள் குழந்தைக்கு 5 வயது இன்னும் முழுமை அடையவில்லையானால் அதாவது 4 வயது வரை அவர்கள் ரயிலில் பயணம் செய்ய எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

ரயில் டிக்கெட் இலவசம்
இவர்களுக்கு டிக்கெட் இல்லாமலேயே இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி உண்டு. இருந்தாலும் ஒரு முக்கியமான விஷயத்தை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலவசமாக பயணம் செய்யும் குழந்தைகளுக்கு ரயிலில் தனியாக இருக்கை அல்லது பர்த் வசதி ஒதுக்கப்பட மாட்டாது. அவர்கள் தங்கள் பெற்றோருடன் அல்லது பாதுகாவலருடன் அமர்ந்து அல்லது படுத்தே பயணிக்க வேண்டும். ஒருவேளை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்குத் தனியாக ஒரு பெர்த் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்கு பெரியவர்களுக்கு இணையான முழு கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஸ்லீப்பர் கோச்
இந்த வயது பிரிவினருக்கு டிக்கெட் எடுப்பதில் 2 விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 5 வயது பூர்த்தியாகி 12 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதி தேவையில்லையென்றால், நீங்கள் பாதி டிக்கெட் எடுத்தால் போதுமானது. அதாவது, பெரியவர்களுக்கான மொத்த டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், இந்த சலுகை விலையில் டிக்கெட் எடுக்கும்போது குழந்தைக்குத் தனியாகச் சீட் வழங்கப்பட மாட்டாது.
மாறாக, 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்குத் தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்காக முழு தொகையையும் செலுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு தனியாக ஒரு பெர்த் ஒதுக்கப்படும். நீண்ட தூரப் பயணங்களின் போது குழந்தைகளின் வசதிக்காகப் பலரும் முழு டிக்கெட் எடுப்பதையே விரும்புகிறார்கள்.
டபுள் ஆப்ஷன் சர்ப்ரைஸ்
உங்கள் குழந்தைக்கு 12 வயது பூர்த்தியாகிவிட்டதென்றால் அவர்கள் பெரியவர்களாகவே கருதப்படுவார்கள். 12 வயதுக்கு மேல் உள்ள யாவருக்கும் ரயில் பயணத்தில் கட்டணச் சலுகைகள் கிடையாது. அவர்களுக்கு முழுத் தொகையையும் செலுத்தி முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது கட்டாயமாகும்...
12 வயதுக்கு மேற்பட்ட குழந்தையை டிக்கெட் எடுக்காமல் அல்லது பாதி டிக்கெட்டில் அழைத்து செல்வது விதிகளுக்கு புறம்பானது. அப்படி பயணம் செய்வது கண்டறியப்பட்டால், ரயில்வே சட்டப்படி அபராதம் விதிக்கப்படும்.
இந்தியன் ரயில்வே
ஐஆர்சிடிசி வெப்சைட், அல்லது செல்போன் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, குழந்தையின் வயதை துல்லியமாகக் குறிப்பிட வேண்டும். 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் புக் செய்யும்போது, "Child (No Seat/Berth)" அல்லது "Child (Berth/Seat Required)" போன்ற டபுள் ஆப்ஷன்களில் ஒன்றை டிக் செய்வது அவசியம். தவறுதலாக தப்பானை ஆப்ஷனை தேர்வு செய்வது பயணத்தின் போது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
டெல்லியில் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் குறித்து வெளியான அதிர்ச்சி அறிக்கைகளுக்கு மத்தியில், உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணிக்கும்போது முறையான டிக்கெட்டுகளைப் பெற்று, பாதுகாப்பாக பயணிப்பது மிக முக்கியமான விஷயமாகும்...!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications