ஆச்சரியப்படுத்தும் அந்நியோன்யம்.. பாஜக + திமுக + அதிமுக.. மீண்டும் கருணாநிதி, ஜெயலலிதா காலம்? சூப்பர்
சென்னை: மதுரையில் நடந்த சம்பவம் ஒன்று, தமிழக மக்களுக்கு மீண்டும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
பொதுவாக ஒரு அரசியலில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது எதிர் சித்தாந்தத்தில் பயணித்தாலும் சரி, மரியாதை நிமித்தமான சந்திப்புகள் நடைபெறுவது என்பது தமிழகத்தில் நடக்கக்கூடிய வழக்கமான ஒன்றுதான்..!
ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக தலைவர்கள், எதிர்க்கட்சிகளுடன் பேசுவதையே தவிர்த்தார்கள்.. நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வந்துவிடுமே என்று பெரும்பாலான நிகழ்வுகளை தவிர்த்து விடுவா;கள்.

பிம்பங்கள்: தற்போது, கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பிம்பங்களுமே இல்லாத இன்றைய அரசியல் சூழலில், அரசியல் நாகரீகம் என்பது காணாமல் போய்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் கடந்த கால அதிமுக காலத்திலும் ஆங்காங்கே தென்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இந்த சலசலப்புகள் ஓரளவு குறைய துவங்கி உள்ளன.
இதற்கு உதாரணமாக, பாஜக ஆதரவாளரான ரங்கராஜ் பாண்டே வீட்டிற்கு, முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்ததை இங்கு சுட்டிக்காட்டலாம். பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் அப்பா, ரகுநாதாசார்யா காலமான நிலையில், முதல்வர் ஸ்டாலின், பாண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.. ரங்கராஜ் பாண்டேவின் கையை இறுக்கமாக பற்றி ஆறுதலையும் சொல்லியிருந்தார்.. இதுகுறித்து, முதல்வரும், ட்வீட் போட்டு பதிவிட்டும் இருந்தார்..
ஓபிஎஸ்: அதேபோல, சில நாட்களுக்கு முன்புகூட, சென்னையில் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று, தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.
அந்தவகையில், சொந்த கட்சியையும் தாண்டி, தமிழக அரசியல் தலைவர்கள், இன்ப, துன்பங்களில் பங்கேற்று, அரசியல் நாகரீகங்களை அவ்வப்போது இழையோடவிட்டு வருவது, மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் சமீபகாலமாகவே மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறது..
தொகுதிகள்: தற்போது எம்பி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையொட்டி தமிழகத்திலும் தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டி உள்ளன.. இந்த முறை திமுக - அதிமுக - பாஜக என 3 கட்சிகளுமே களம் காண்கின்றன. அதிலும் பெரும்பாலான தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் சூழலும் களத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதி மக்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, அந்தந்த வேட்பாளர்கள் ஒரே தொகுதிக்குள் நேருக்கு நேர் யதேச்சையாக சந்தித்து கொள்வது இயல்பாக நடக்ககூடிய விஷயமே.
அந்தவகையில், 2 நாட்களுக்கு முன்பு, சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடத்தில், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜகவின் தமிழிசை சவுந்தராஜனும் நேருக்கு சந்தித்து கொண்டார்கள். ஒருவரையொருவர் பார்த்ததுமே, அங்கேயே கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். தமிழிசை பக்கத்திலேயே மூத்த தலைவர் கரு நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தார்கள்.. அவர்களுக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து சொன்னார்.
நெகிழ்ச்சி: தமிழசை + தமிழச்சி இருவரின் அப்பாக்களும் எம்எல்ஏ குடியிருப்பில் அருகருகே குடியிருந்தவர்களாம். அதனால், அப்போது முதலே இருவருக்கும் இடையே நட்பு இருந்து வந்துள்ள நிலையில், இப்போது நேருக்கு நேர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்கள்.
அப்படித்தான் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரும், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டார்கள்.. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நவாஸ்கனியும் ஓபிஎஸ்சும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்கள்.
சரவணன்: இதோ இப்போது மதுரையில் இதே நிகழ்வு நடந்துள்ளது.. மதுரை தொகுதிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தபோது அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டார்கள்.. சரவணனின் தோளை தொட்டு, அவரிடம் நலன் விசாரித்தார் வெங்கடேசன்..
அதேபோல, சரவணனும், வெங்கடேசனுக்கு வாழ்த்துக்களை சொன்னார்.. இருவருமே ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி கொண்டார்கள்.. இதனால், சுற்றியிருந்த 2 கட்சி நிர்வாகிகளும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்.. அரசியலில் எதிர் எதிர் பாதையில் பயணித்தாலும், கட்சி தலைவர்களிடம், அன்பும் நட்பும் நீடித்தே வருவது, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சபாஷ்: ஆக மொத்தம், அரசியல் நாகரீகம் இன்னும் தமிழ்நாட்டில் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடவில்லை என்பதும், அது மீண்டும் துளிர்த்து தழைக்க தொடங்கிவிட்டது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி கொண்டிருக்கிறது.. சபாஷ்..!!
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications