Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அங்க பாருங்க, கவனம்".. பதறிய ஸ்டாலின்.. "ஐ டோன்ட் கேர்".. இங்கிலீஷில் பொளந்து கட்டி.. பூரித்த "மலை"

குழந்தையை தூக்கி கொஞ்சிய முதல்வர் ஸ்டாலினின் வீடியோ வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின், திருவண்ணாமலையில் பொதுமக்களை சந்தித்த நிகழ்வுகள், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில், ரூ.340 கோடி மதிப்பிலான 246 திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் முதல்வர் பேசும்போது, "அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்யவும்,கிரிவலம் செல்லவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தரும்.

 மதம் - கோவில்

மதம் - கோவில்

மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல. ஆன்மிக போலிகள்.. வியாதிகள்.நாங்கள் மதத்தை வைத்து ஆட்சி நடத்தவில்லை... மக்கள் முன்வைத்து கட்சி ஆட்சி நடத்துகிறோம்... கோவிலுக்கு திருப்பணி செய்வது திராவிட மாடலா என்று கேட்கிறார்கள்.. அனைத்து துறை வளர்ச்சி பெறுவது தான் திராவிட மாடல்.. ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் கிடையாது.. மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மீகம் இருக்க முடியாது. அறநெறியை கொண்ட ஆட்சி நடத்தி வருகிறோம்.

 பிம்பங்கள்

பிம்பங்கள்

போலியான பிம்பங்களை கட்டமைப்பவர்களுக்கு பொய்களும் தான் தேவை. மக்களுக்கு தேவையான கல்வி, வேளாண்மை புதிய தொழில் தமிழகம் தமிழினமும் முன்னேற சிந்தித்து செயல்படுவது தான் திராவிட மாடல்... அறிவார்ந்தவர்கள் பேசுவதை மட்டுமே கேட்க வேண்டும். இது தேர்தல் காலம் கிடையாது. மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட காலம்.. பொய், புரட்டு சொல்பவர்கள் பற்றி ஐ டோன்ட் கேர்'.. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் மக்கள் பணியாற்றி வருகிறேன்... ஃபைல்கள் முடங்கி விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறேன்" என்றார்.

பூரிப்பு

பூரிப்பு

முன்னதாக, இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.. முதல்வரை கண்டதுமே கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.. இரு பக்கமும் திரண்டிருந்த மக்கள், முதல்வரை பார்த்து குதூகலமடைந்து தங்கள் கைகளை நீட்டினர்.. உடனே அவர்களின் கைகளை பிடித்து குலுக்கி மகிழ்வித்தார் முதல்வர்.. பிறகு, சிலர் மனுக்கள் நீட்டினார்கள்.. அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வர், பின்னால் வந்து கொண்டிருந்த அதிகாரியிடம் தந்தார்.

Recommended Video

    Dhoni-யின் 41st Birthday! London-ல் Wimbledon Match பார்த்தார் | *Viral
    குழந்தை

    குழந்தை

    சில இளைஞர்கள் செல்போனை எடுத்து செல்பிக்கு முயன்றார்கள்.. அவர்களை பார்த்ததும், முதல்வரே அவர்களின் செல்போனை வாங்கி பிடித்து, அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்தார்.. வரிசையில் ஒரு பெண் குழந்தையுடன் நின்றிருந்தார்.. அந்த குழத்தையை வாரி தூக்கிய கொஞ்சினார் முதல்வர்.. பிறகு தாயிடம் அந்த குழந்தையை தரும்போது, பார்த்து பார்த்து, கவனமா வாங்குங்க என்று பதறினார்.. எந்தவிதமான பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாமல், இயல்பாக, எளிமையாக, கூட்டத்தில் ஒருவராய் அன்பை பொழிந்து கொண்டிருந்தார் முதல்வர்.. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+