அவரும் இங்கே வர்றாரா? திமுக ஓட்டை உடைக்க பாஜக போடும் மெகா கூட்டணி.. ஹேப்பி மோடில் எடப்பாடி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அதனால் விஜய் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக ஏற்காது. விஜய் 1 மணி நேரம்கூட வெயிலில் இருக்க மாட்டார்.. கேரவனில்தான் இருப்பார்.. திமுகவை அரியணையிலிருந்து அகற்ற வேண்டுமானால், வலுவான கூட்டணியே தேவை என்பதை பாஜக முடிவு செய்து, காய்நகர்த்தி வருகிறது" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

Kingwoods news யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "கடந்த தேர்தலில் திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தை அதிமுக இழந்ததற்கு காரணம், 3 சதவீதம் வாக்குகள்தான்..

DMK Edappadi Palanisamy BJP

அந்த இழந்துபோன 3 சதவீத வாக்குகளை 5 சதவீதமாக பெற்றுவிடலாம் என்று அதிமுக கணக்கு போடுகிறது.. அத்துடன் அதிருப்தி ஓட்டுக்கள் 2 சதவீதம் வரும் என்றும் நினைக்கிறது. மொத்தத்தில் விஜய் வழியாக 10 சதவீத வாக்குகளை பெற அதிமுக திட்டமிடுகிறது.

உருவாகும் கூட்டணி

ஆக, அதிமுக-விஜய் கூட்டணியை பாஜக இறுதியாக்கிவிடும்.. விஜய் பாஜகவை எதிர்த்து பேசினாலும், ஜான் ஆரோக்கியசாமி, பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா இவர்கள் 3 பேருமே திமுகவை எதிர்ப்பதுதான் முதன்மையான லட்சியமாக கொண்டுள்ளனர்.. திமுகவிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றால், அதிமுக, பாஜக என்ற பலமான சக்தி வேண்டும் என்று விஜய்யிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள்..

இதே முயற்சியைதான் ஆதவ் அர்ஜூனா ஏற்கனவே கையில் எடுத்தார்.. அதாவது, அதிமுக, விஜய், விசிக என்ற கூட்டணியை முயற்சித்தார்.. ஆனால் அது சரியாக அமையவில்லை..

இப்போது அதிமுகவுக்கு விஜய் வந்தால் போதும், தானாகவே சிறுத்தைகளும் வந்துவிடுவார்கள் என்பது எடப்பாடியின் கணக்காக உள்ளது.. சிறுத்தை வந்தால் சிபிஎம் வந்துவிடும்.. பின்னாடியே வேல்முருகனும் வந்துவிடுவார்.. இந்தக்கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். அதுமட்டுமல்ல, சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறவே விஜய்யை தங்களிடம் கொண்டுவர பாஜக, அதிமுக இரு கட்சிகளுமே முயல்கின்றன.

சீட் இழுபறிகள்

ஆனாலும் விஜய் 100 சீட் கேட்கிறார்.. அப்படியானால் 134 சீட்டுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? கூட்டணி கட்சிகளுக்கும் தர வேண்டியிருக்கிறது. அதிமுகவுக்காக 150 சீட்டுக்களை வைத்து கொண்டு, மிச்சம் 84-ஐ அனைவருக்கும் பிரித்து தர நினைக்கிறார் எடப்பாடி. பாஜகவிடமும் இதே டீல்தான் பேசுகிறார்.. ஏனென்றால், 150 இருந்தால்தான், 118 சீட்டில் வெற்றி பெற முடியும், முதல்வராவதற்கு யாரிடமும் கையேந்த வேண்டியிருக்காது என்று எடப்பாடி நினைக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அதனால் விஜய் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக ஏற்காது. விஜய் 1 மணி நேரம்கூட வெயிலில் இருக்க மாட்டார்.. கேரவனில்தான் இருப்பார்..

தேமுதிக, பாமக, பாஜக, அதிமுக, விஜய் கூட்டணி அமைந்தாலும், இதில், பாமக, தேமுதிகவுக்கு வெறும் ஒன்றரை சதவீதம் வாக்கு மட்டுமே உள்ளது.. பாமகவுக்குள் அப்பா - மகனுக்கும் சண்டை வேற.. அதனால், பாமக, தேமுதிக என்பது ஒரு லேபிள் மட்டுமே.. ஓட்டுவங்கி என்பது, விஜய், அதிமுக, பாஜக இந்த மூன்றுதான் ஓட்டு வங்கி..

திமுக என்ன செய்ய போகிறது

மெகா கூட்டணியையே பாஜக நம்பி கொண்டிருக்கிறது.. காரணம், ஏற்கனவே நாடாளுமன்றத்திலும் திமுகவிடம் பாஜகவுக்கு சண்டை, அரசியலிலும் சண்டை, தென்மாநில அரசியலுக்கு வழிகாட்டியாக இருப்பதும் திமுகதான். எனவே, திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிட்டால் அகில இந்திய அளவில் தங்களுக்கு குடைச்சல்கள் வந்துவிடும் என்று பாஜக நினைக்கிறது.. அதனால்தான், வலுவான கூட்டணியை தயார் செய்து கொண்டிருக்கிறது.

வரும் ஆகஸ்ட் 30-க்குள் கூட்டணி அமைய வேண்டும் என்றும் கூட்டணிகளுக்கு பாஜக சொல்லிவிட்டது. தேவைப்பட்டால் சீமானையும் பாஜக உள்ளே கூட்டணிக்கு கொண்டுவந்துவிடும். சீமானும் ஏற்கனவே நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருக்கிறார்.

வாக்குகள் உடைகிறதா

இப்போது திமுகவுக்கு ஜூரம் வந்துவிட்டது.. விஜய் தனித்து நின்றால் மட்டுமே திமுகவுக்கு லாபம்.. அதிமுகவுடன் சென்றால் திமுக ஓட்டு பிரியும்.. திமுகவுக்கு இப்போதுள்ள மிகப்பெரிய பிரச்சனையே, அதிமுக கூட்டணி வலுவான கூட்டணியாக மாறிவிடக்கூடாது என்பதுதான்.. காரணம், திமுகவில் வலுவான கூட்டணி இப்போதைக்கு இல்லை..

சிபிஎம் 1 சதவீதம், சிபிஐ 1 சதவீதம், வைகோ பெரிதாக ஒன்றுமில்லை, காங்கிரஸ், சவக்குழிக்குள் போயிடுச்சு.. காங்கிரஸ் பெற்று வரும் வாக்குகள் அனைத்தும் திமுக ஓட்டுக்கள்தான். எனவே திமுக கூட்டணி பலவீனமாக உள்ளது" எனறு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+